27 வயதுதான்.. எப்படி கொரோனா வந்தது என்றே தெரியவில்லை.. திடீர் பலி.. சென்னையை உலுக்கிய ஒரு மரணம்!

சென்னையில் கொரோனா தாக்குதல் காரணமாக இரண்டு பேர் பலியாகி உள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கொரோனா தாக்குதல் காரணமாக இரண்டு பேர் பலியாகி உள்ளனர். சென்னையை இந்த சம்பவம் உலுக்கி உள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 104 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் மொத்தமாக 2162 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ஒரே நாளில் 94 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மொத்தமாக 768 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவும் வேகம் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் இரண்டு பேர் பலி ஆகியுள்ளார். தமிழகத்தில் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையை சேர்ந்தவர்கள்

சென்னையை சேர்ந்தவர்கள்

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று பலியான இரண்டு பேரும் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒருவர் 65 வயது முதியவர். ஆண். இவருக்கு கடந்த வாரம் கொரோனா ஏற்பட்டது. ஒரு வாரமாக இவர் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை வியாதி உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்துள்ளது.

சிகிச்சை அளிப்பதில் சிக்கல்

சிகிச்சை அளிப்பதில் சிக்கல்

இதனால் இவருக்கு சிகிச்சை அளிப்பதில் நிறைய சிக்கல் இருந்தது. இவர் கடந்த இரண்டு நாட்களாக மிக மோசமான உடல்நிலையில் இருந்தார். இன்று காலை இவரின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. மூச்சு விடுவதில் தொடர்ந்து சிரமம் நிலவி வந்தது. இந்த நிலையில் இன்று மதியம் இவர் கொரோனா காரணமாக பலியானார். இன்று மாலை இவரின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

பெண் ஒருவர்

பெண் ஒருவர்

அதேபோல் சென்னையில் மேலும் ஒரு 25 வயது பெண் ஒருவர் கொரோனா காரணமாக பலியானார். இவருக்கு இன்று காலைதான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. இவர் கடந்த 27ம் தேதியே பலியாகிவிட்டார். ஆனால் இன்று காலைதான் இவருக்கு கொரோனா இருப்பதே கண்டுபிடிக்கப்பட்டது. இவர் உடல்நிலை நன்றாகவே இருந்தது. இவர் கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

எப்படி வந்தது

எப்படி வந்தது

மிகவும் நல்ல உடல் நிலையில் இருந்தவர் திடீர் என்று 27ம் தேதி பலியானார். இவருக்கு எப்படி கொரோனா வந்தது என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 27 வயது கொண்ட இவர் எப்படி பலியானார் என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பலியான நபர்களில் இந்த பெண்தான் மிகவும் வயது குறைவான நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+