ஒரே நாளில் புது ரெக்கார்ட்.. அதிகரிக்கும் கொரோனா கேஸ்களுக்கு இடையே தமிழகத்திற்கு ஒரே நல்ல செய்தி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று ஒரே நாளில் மொத்தம் 219 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பின் தமிழகத்தில் கொஞ்சம் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6535 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் 279 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக சென்னையில் மட்டும் 3330 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

செம நல்ல செய்தி

செம நல்ல செய்தி

தமிழகம் முழுக்க இன்று மொத்தம் 219 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மொத்தமாக தமிழகத்தில் 1824 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிகவும் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது வந்தனர். தினமும் 30-40 பேர் மட்டுமே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வந்தனர்.

இன்று அதிகரிப்பு

இன்று அதிகரிப்பு

ஆனால் இன்று அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏப்ரல் 27ம் தேதியில் இருந்து தமிழகத்தில் தினமும் கேஸ்கள் அதிகரித்து வந்தது. அதேபோல் குணப்படுத்தும் நபர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்ட வந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் குணப்படுத்தப்படும் நபர்களின் சதவிகிதம் 70%ல் இருந்து வேகமாக குறைந்தது. கடந்த மாதம் 70 சதவிகிதத்தில் இருந்து வேகமாக இந்த சதவிகிதம் 45% ஆக குறைந்தது. இது தொடர்ந்து குறைத்து 25%க்கும் கீழ் சென்றது.

தமிழகம் மீள்கிறது

தமிழகம் மீள்கிறது

இந்த நிலையில் தற்போது தமிழகம் இதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீள தொடங்கி உள்ளது. நேற்று குணமடைவோர் சதவிகிதம் 26.71% ஆக இருந்தது. இன்று அது கொஞ்சம் அதிகரித்துள்ளது. இன்று இந்த சதவிகிதம் 27.91% ஆக உயர்ந்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் சென்னையில் 171 பேர் வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் தற்போது குணமடையும் வேகம் அதிகரித்துள்ளது.

அதிகரிக்கும் டெஸ்ட்

அதிகரிக்கும் டெஸ்ட்

அதேபோல் தமிழகத்தில் கொரோனா டெஸ்ட்கள் அதிகப்படுத்தப்பட்டு வருகிறது . இன்று மட்டும் 13254 மாதிரிகள் கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 229670 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 12299 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 219406 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிக பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+