மீண்டும் உயரும் கொரோனா கிராப்.. தமிழகத்தில் நேற்று திடீர் என அதிகரித்த கேஸ்கள்.. 3 முக்கியமான காரணம்
சென்னை: தமிழகத்தில் நேற்று கொரோனா கேஸ்கள் மீண்டும் திடீர் என்று அதிகரித்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு மூன்று முக்கியமான காரணங்கள் சொல்லப்படுகிறது.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா வேகம் குறைவதற்கு பதிலாக மீண்டும் வேகம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1477 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று 105 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 411 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா காரணமாக 15 பேர் பலியாகி உள்ளனர். நேற்று சென்னையில் மட்டும் 50 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அங்கு 285 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

காரணம் 1 என்ன
தமிழகத்தில் இப்படி திடீர் என்று கேஸ்கள் அதிகரிக்க காரணம் அறிகுறியே இல்லாமல் பரவும் கொரோனாதான் என்கிறார்கள். அதாவது முதலில் ஒரு நபர் வெளிநாட்டில் இருந்து வருகிறார். அவருக்கு கொரோனா ஏற்படுகிறது. அதன்பின் அவரின் உறவினர்கள் எல்லோரும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இந்த நிலையில் அவரின் உறவினர்கள் யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை. 28 நாட்கள் முழுக்க தனிமைப்படுத்தப்பட்ட பின்பும் கொரோனா அறிகுறி இல்லாமல் இருக்கிறார்கள்.

திடீரென்று வருகிறது
ஆனால் கடைசி நாளில் திடீர் என்று அவர்களுக்கு கொரோனா அறிகுறி ஏற்படுகிறது. அதோடு திடீர் என்று மிக மோசமாக உடல்நிலை மாறுகிறது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. சோதனை செய்து பார்த்தால் திடீரென கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. அதாவது 28 நாட்கள் அறிகுறியே இல்லாமல் அந்த உறவினரின் உடலில் கொரோனா இருந்தது. அறிகுறி இல்லாததால் அரசும் இவர்களை சோதனை செய்யவில்லை.

சொதப்புகிறது
இவர்களுக்கு அறிகுறி இல்லாத காரணத்தால் இவர்களும் தங்கள் உறவினர்களுடன் வீட்டில் சகஜமாக பழகுகிறார்கள். இதனால் அவர்கள் மூலம் அவர்களின் மற்ற உறவினர்களுக்கும் அறிகுறியே இல்லாமல் கொரோனா பரவுகிறது. இதனால் கடைசி நேரத்தில் இப்படி பலர் மருத்துவமனைக்கு வருகிறார்கள். இப்படித்தான் திடீர் திடீர் என்று கேஸ்கள் தமிழகத்தில் அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது. அறிகுறியே இல்லாமல் பரவும் கொரோனாதான் இதற்கு முதல் காரணம் ஆகும்.

மாறும் ரிசல்ட்
அதேபோல் இன்னொரு பக்கம் முதலில் ஒருவருக்கு கொரோனா சோதனை செய்தால் நெகட்டிவ் என்று வருகிறது. இதனால் அவரை தனிமைப்படுத்தாமல் அரசு விட்டுவிடுகிறது. இதனால் அவர் தனது உறவினர்களுடன் பழகுகிறார். ஆனால் 28 நாட்களுக்கு பின் திடீர் என்று அறிகுறி ஏற்படுகிறது. அதன்பின் மீண்டும் சோதனை செய்தால் இரண்டாவது முறை கொரோனா பாசிட்டிவ் என்று வந்து அதிர்ச்சி அளிக்கிறது. இப்படி மாறி மாறி சென்னையில் சிலருக்கு கொரோனா முடிவுகள் வந்துள்ளது. இதுதான் கொரோனா பரவ இரண்டாவது காரணம் ஆகும்.

மூன்றாவது காரணம்
அதேபோல் தற்போது கொரோனா அதிகம் பரவும் இடங்கள் என்று பார்த்தால் அது சென்னை (முக்கியமாக ராயபுரம், தேனாம்பேட்டை), திருப்பூர், தஞ்சாவூர் போன்ற ஏற்கனவே உருவான கிளஸ்டர் பகுதிகள் ஆகும். இது போன்ற கிளஸ்டர் பகுதிகளில் கொரோனாவை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமான காரியமாக மாறியுள்ளது. கிளஸ்டர் பகுதிகளில் போதுமான சோதனைகள் நடக்காதது மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாததுதான் இதற்கு காரணம் எனப்படுகிறது.

கிளஸ்டர் பகுதிகள்
அதாவது கிளஸ்டர் பகுதிகளில் இருக்கும் முக்கால்வாசி மக்களை கொரோனா சோதனைக்கு உட்படுத்தி அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். கேரளாவில் காசர்கோட்டில் கிளஸ்டர் உருவான போது அங்கு பலர் இப்படி கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அறிகுறி இல்லாத நபர்கள் கூட கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதுதான் காசர்கோட்டில் கிளஸ்டர் பரவலை தடுக்க காரணம் ஆகும்.

ஆனால் தமிழகம் எப்படி
ஆனால் தமிழகத்தில் அப்படி ஒரே இடத்தில் விரிவான சோதனைகள், அறிகுறி இல்லாதவர்களுக்கு சோதனைகள் செய்யப்படுவது இல்லை. முக்கியமாக ராயபுரம், தேனாம்பேட்டை , திருப்பூர், தஞ்சாவூர் போன்ற இடங்களில் இப்படி ரேண்டம் சோதனைகள் செய்யப்படுவது இல்லை. இதுதான் அறிகுறியே இல்லாமல் திடீர் திடீர் என்று பலருக்கு கொரோனா பரவ காரணம் ஆகும். நேற்று திடீர் என்று பலருக்கு கொரோனா ஏற்பட இதுதான் காரணம்.

ஒரே வழி
இதை தடுக்க சில அவசரமான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். உடனே தமிழகத்தில் கொரோனா சோதனைகளை மேலும் அதிகரிக்க வேண்டும். அறிகுறி உள்ளவர்கள் மட்டுமின்றி அறிகுறி இல்லாத நபர்களுக்கும் கொரோனா சோதனைகளை செய்ய வேண்டும். ரேண்டம் சோதனைகளை அதிகரிக்க வேண்டும். கிளஸ்டர் பகுதிகளில் அதிகமாக சோதனை செய்து மக்களை தனிமைப்படுத்த வேண்டும்.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications