சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லா மாவட்டத்திற்கும் பரவியது.. இன்றுதான் இதுவரை மோசம்.. தமிழகத்தை உலுக்கிய கொரோனா.. என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில் 31 மாவட்டங்களில் இன்று கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1982 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தம் 40698 பேர் தமிழகத்தில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுவரை இல்லாத அளவாக இன்று புதிய உச்சமாக தமிழகத்தில் கொரோன கேஸ்கள் பதிவாகி உள்ளது. தினசரி கொரோனா கேஸ்கள் 2000ஐ நெருங்கி வருகிறது.

உள்ளே வராதீர்கள்.. 15 முறை சரமாரியாக சுட்ட நேபாள போலீஸ்.. இந்தியர் ஒருவர் பலி.. எல்லையில் பரபரப்பு!உள்ளே வராதீர்கள்.. 15 முறை சரமாரியாக சுட்ட நேபாள போலீஸ்.. இந்தியர் ஒருவர் பலி.. எல்லையில் பரபரப்பு!

அதிக சோதனை

அதிக சோதனை

தமிழகத்தில் இன்று அதிகமாக கொரோனா சோதனைகள் செய்யப்பட்டு இருக்கிறது. தினமும் 14-16 ஆயிரம் என்ற நிலையில் தமிழகத்தில் கொரோனா சோதனைகள் செய்யப்பட்டது. தற்போது அந்த சோதனை எண்ணிக்கை உயர்த்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இன்று 18231 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு இருக்கிறது. மொத்தமாக இன்று 16889 கொரோனா மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு உள்ளது.

மொத்தம் எத்தனை

மொத்தம் எத்தனை

இதுவரை தமிழகத்தில் 673906 கொரோனா மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு உள்ளது. மொத்தமாக 642201 நபர்கள் சோதனை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இன்றுதான் இதுவரை செய்யப்பட்டதிலேயே அதிகமான நபர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் இன்று அதிக அளவில் கொரோனா கேஸ்கள் வந்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு இன்று கொரோனா கேஸ்கள் அதிகம் வந்துள்ளது.

மிக மோசம்

மிக மோசம்

தமிழகத்தில் மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில் 31 மாவட்டங்களில் இன்று கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. இதற்கும் டெஸ்டிங் அதிகமாக செய்யப்பட்டதுதான் காரணம் என்கிறார்கள் . பொதுவாக சென்னையில் மட்டும்தான் அதிகமாக கொரோனா சோதனை செய்யப்படும். ஆனால் இன்று மற்ற மாவட்டங்களிலும் தமிழகத்தில் அதிக கொரோன சோதனை செய்யப்பட்டது. இதனால் மற்ற மாவட்டங்களிலும் அதிக கேஸ்கள் வந்துள்ளது.

எங்கு வந்தது

எங்கு வந்தது

முக்கியமாக இன்று அரியலூரில் 4 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 128 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கள்ளகுறிச்சியில் 13 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 26 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மதுரையில் 31 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சிவகங்கையில் 12 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. திருவள்ளூரில் 92 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் அதிகம்

நாளுக்கு நாள் அதிகம்

கடந்த சில நாட்களாக பெரிய அளவில் கேஸ்கள் வராமல் இருந்த மாவட்டங்களில் கூட இன்று அதிக கேஸ்கள் வந்துள்ளது. அதே சமயம் தமிழகத்தில் நீலகிரியில் தொடர்ந்து கேஸ்கள் எதுவும் இல்லை. ஈரோடு மற்றும் திருப்பூரில் ஒரே ஒரு கேஸ்கள் மட்டுமே உள்ளது. பெரம்பூரில் இரண்டு கேஸ்கள் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Coronavirus: 31 Districts in Tamilnadu gets COVID-19 cases today, A new worst surge in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X