சென்னையில் அதிரடி திருப்பம்.. மற்ற மாவட்டங்களில் மோசம்.. தமிழகத்தில் இன்று 4280 பேருக்கு கொரோனா!
சென்னை: தமிழகத்தில் இன்று 4280 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா வேகம் எடுத்து வருகிறது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக 4000+ பேருக்கு தமிழகத்தில் கொரோனா ஏற்பட்டுள்ளது. 1 லட்சம் பேருக்கும் அதிகமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
107001 பேருக்கு தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1842 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

சென்னை நிலை
சென்னையில் தொடர்ந்து நிலைமை மோசமாகி வந்த நிலையில் இன்று கொஞ்சம் கேஸ்கள் குறைவாக வந்துள்ளது. கடுமையான கட்டுப்பாடு இதற்கு காரணம் என்கிறார்கள். சென்னையில் மொத்தம் 66538 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று மட்டும் மொத்தம் 2214 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.தமிழகத்தில் மொத்தமாக 60592 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

பலி எண்ணிக்கை
தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்து வறுகிறது மொத்தமாக ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 44956 ஆக உள்ளது. தமிழகத்தில் 65 பேர் இன்று கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 1450 பேர் பலியாகி உள்ளனர்.

வேறு எங்கு
சென்னைக்கு அடுத்து இன்று மதுரையில் 350 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 3776 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது .இன்று செங்கல்பட்டில் 215 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 6355 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று திருவள்ளூரில் 256 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 4596 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

இன்று சோதனை
தொடர்ந்து கொரோனா சோதனைகளை தமிழகம் துரிதப்படுத்தி உள்ளது. இன்று 36164 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. 1306884 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 35426 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 1249317 பேருக்கு தமிழகத்தில் இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications