அதிர்ச்சி.. இன்று ஒரே நாளில் 4329 பேருக்கு கொரோனா.. 64 பேர் பலி.. மொத்த பாதிப்பு 102721ஐ தொட்டது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று மொத்தம் 4329 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடுமையாகி உள்ளது. சென்னை மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் ஆகியுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 102721 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த 16 நாட்களில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான கேஸ்கள் வந்துள்ளது.

சென்னை எப்படி

சென்னை எப்படி

தமிழகத்தில் மொத்தம் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 42955 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 2082 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 64680 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கையே 23581 ஆக உயர்ந்துள்ளது.

பலி எண்ணிக்கை

பலி எண்ணிக்கை

தமிழ்கத்தில் இன்று 2357 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் மொத்தமாக 58378 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இன்று 64 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 1385 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

இன்று சோதனை

இன்று சோதனை

இன்று 35028 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. 1270720 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 34242 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 1213891 பேருக்கு தமிழகத்தில் இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனைகளை தமிழகம் துரிதப்படுத்தி உள்ளது.

வேறு எங்கு

வேறு எங்கு

சென்னைக்கு அடுத்து இன்று செங்கல்பட்டில் 330 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 6189 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று மதுரையில் 287 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 3423 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று திருவள்ளூரில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 4343 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+