இதுவரை இல்லாத உச்சம்.. தமிழகத்தில் இன்று 4979 பேருக்கு கொரோனா.. 1.70 லட்சம் பேர் பாதிப்பு.. ஷாக்!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 4979 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு இன்று அதிக கேஸ்கள் பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் கொரோனா வேகம் எடுத்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,65,714 லிருந்து 1,70,693 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 1254 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 85859 ஆக உயர்ந்துள்ளது .

பலி எண்ணிக்கை
தமிழகத்தில் இன்று 78 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 2481 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 27 பேர் பலியாகி உள்ளனர். மதுரையில் 8 பேர் பலியாகி உள்ளனர். அதேபோல் செங்கல்பட்டில் 8 பேர் பலியாகி உள்ளனர் .

டிஸ்சார்ஜ் எத்தனை
இன்று மட்டும் தமிழகத்தில் 4059 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 50294 ஆகி உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 117915 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் 112 கொரோனா சோதனை மையங்கள் உள்ளது.

இன்று சோதனை
இன்று 52993 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. 1932492 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 51640 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 1855817 பேருக்கு தமிழகத்தில் இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனைகளை தமிழகம் துரிதப்படுத்தி உள்ளது.
Recommended Video

வேறு எங்கு
சென்னைக்கு அடுத்து இன்று திருவள்ளூர் 410 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 9110 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று மதுரையில் 206 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 8251 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று செங்கல்பட்டில் 306 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 9658 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications