ஒரு வாரமாக மோசம்.. தமிழகத்தில் ஒரே நாளில் 6426 கொரோனா கேஸ்கள்.. மொத்த பாதிப்பு 234114 ஆக உயர்வு!
சென்னை: தமிழகத்தில் இன்று 6426 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 234114 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக தினமும் 6 ஆயிரத்திற்கும் அதிகமான கேஸ்கள் வருகிறது. அதிலும் சில நாட்கள் 7 ஆயிரத்திற்கும் நெருக்கமாக அதிக கேஸ்கள் தமிழகத்தில் வந்தது.
இந்தநிலையில் இன்று 6426 கேஸ்கள் தமிழகத்தில் வந்துள்ளது. சென்னையில் இன்று 1117 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மொத்தமாக 977575 பேர் சென்னையில் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை எப்படி
சென்னையில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 12735 ஆக உள்ளது. தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 57490 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 5,927 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து உள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை 1,72,883 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து உள்ளனர்

மரணம் எப்படி
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா காரணமாக பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தில் இன்று 82 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 3741 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். கேஸ்கள் கொஞ்சம் குறைந்தாலும் பலி எண்ணிக்கை தொடர்ந்து வேகமாக உயர்ந்தபடியே இருக்கிறது.

சென்னைக்கு அடுத்து
சென்னைக்கு அடுத்து இன்று திருவள்ளூரில் 382 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 13184 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று செங்கல்பட்டில் 540 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 13841 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று திருநெல்வேலியில் 379 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 4729 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

சோதனை எத்தனை
இன்று 60794 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. 2536660 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 58818 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 2442482 பேருக்கு தமிழகத்தில் இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனைகளை தமிழகம் துரிதப்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications