796 கொரோனா நோயாளிகள்.. மருத்துவமனையிலிருந்து திடீரென முகாமிற்கு மாற்றம்.. சென்னையில் என்ன நடக்கிறது?
சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 796 நோயாளிகள் இதுவரை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் தற்போது பல்வேறு முகாம்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்திலும் கொரோனா தீவிரம் அடைந்து வருகிறது. சென்னையில் தொடர்ந்து கொரோனா கேஸ்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6009 ஆக உள்ளது.
மொத்தம் 1605 பேர் குணமடைந்து உள்ளனர். சென்னையில் மட்டும் 3046 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 40 பேர் பலியாகி உள்ளனர்.

இடமாற்றம் செய்தனர்
இந்த நிலையில் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 796 நோயாளிகள் இதுவரை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் தற்போது பல்வேறு முகாம்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவர்களில் மொத்தம் 178 பேர் முகாமில் இருந்து சொந்த வீட்டிற்கு மாற்றப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு கொரோனா பாதிப்பு குணமடையவில்லை.

அரசு முடிவு
கொரோனா குணமடையும் முன்பே இவர்கள் இப்படி வீடுகளுக்கும், முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அறிகுறி இல்லாமல் கொரோனா வரும் நபர்கள் இனி வீட்டிலேயே சிகிச்சை பெறலாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு பதில் வீடு அல்லது முகாமில் சிகிச்சை பெறலாம் என்று அரசு கூறியது.இதற்கான வசதிகளை ஏற்படுத்தி தருவதாகவும் அரசு கூறியுள்ளது.

பாதிப்பு இல்லை
இதன் தொடர்ச்சியாக தற்போது நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்கள் பெரிய அளவில் கஷ்டப்படுவது இல்லை. சரியான உணவு மற்றும் தொடர் மருந்து கொடுத்தாலே குணமாகிவிடுகிறார்கள். இதனால் மருத்துவமனையில் சிகிக்ச்சை அளிப்பதற்கு பதிலாக வீடுகளில் உரிய பாதுகாப்போடு சிகிச்சை அளிக்கலாம் என்று அரசு கூறியுள்ளது. தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கையும் குறைவுதான்.

இறப்பு என்ன?
தமிழகத்தில் இறப்பு சதவிகிதம் 1%க்கும் குறைவாகவே உள்ளது. இந்த நிலையில்தான் தற்போது நோயாளிகள் இடமாற்றப்பட்டுள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்பாக்கம் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் இருந்து நோயாளிகள் மாற்றப்பட்டுள்ளனர். பெரிய பாதிப்பு இல்லாத நபர்கள் மட்டும் இப்படி இடமாற்றப்பட்டுள்ளனர். மோசமான நிலையில் இருக்கும் நபர்கள் , வயதான நபர்கள் மருத்துவமனையில்தான் இருக்கிறார்கள்.

எங்கே இருக்கிறார்கள்?
சென்னையில் வைஷ்ணவா கல்லூரி, லயோலா கல்லூரி மற்றும் வேலம்மாள் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் இப்படி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதிக நோயாளிகள் வந்தால் அதை எதிர்கொள்ள வசதியாக இப்படி செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதும் இந்த முடிவிற்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications