பெரும் அதிர்ச்சி.. சென்னை, மதுரையில் மோசமான நிலைமை.. ஒரே நாளில் தமிழகத்தில் 88 பேர் கொரோனாவிற்கு பலி
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 88 பேர் கொரோனாவிற்கு பலியான சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் இன்று 4807 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 1,65,714 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 1219 பேருக்கு கொரோனா பாதிப்பு. சென்னையில் மொத்த பாதிப்பு 84598 ஆக உயர்ந்துள்ளது.

ஆனால் என்ன
ஆனால் இன்னொரு பக்கம் தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவு இன்று 88 பேர் தமிழகத்தில் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 2403 பேர் பலியாகி உள்ளனர். சென்னையில் மட்டும் 31 பேர் பலியாகி உள்ளனர். சென்னையில் மொத்த பலி எண்ணிக்கை 1407 ஆக உள்ளது .

மதுரை இன்று
மதுரையில் 9 பேர் பலியாகி உள்ளனர். திருவள்ளூரில் இன்று 7 பேர் பலியாகி உள்ளனர். காஞ்சிபுரத்தில் இன்று ஐந்து பேர் பலியாகி உள்ளனர். தேனியில் இன்று 4 பேர் பலியாகி உள்ளனர். அதேபோல் ராமநாதபுரத்தில் இன்று 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும் வேலூரிலும் இன்று 4 பேர் பலியாகி உள்ளனர்.

மொத்தம் எத்தனை
மொத்தமாக மதுரையில் 147 பேர் பலியாகி உள்ளனர். திருவள்ளூரில் மொத்தமாக 154 பேர் பலியாகி உள்ளனர். காஞ்சிபுரத்தில் மொத்தமாக ஐந்து பேர் பலியாகி உள்ளனர். தேனியில் மொத்தமாக 30 பேர் பலியாகி உள்ளனர். அதேபோல் ராமநாதபுரத்தில் மொத்தமாக 47 பேர் பலியாகி உள்ளனர். மேலும் வேலூரிலும் மொத்தமாக 25 பேர் பலியாகி உள்ளனர்.

மரணம் அதிகரிக்கிறது
தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக தினமும் 60+ மரணங்கள் வர தொடங்கி உள்ளது. நினைத்ததை விட தமிழகம் மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் கேஸ்கள் அதிகமாக வரும் நிலையில் இன்னொரு பக்கம் பலி எண்ணிக்கையும் அதிகம் வருகிறது. இதில் பலர் 40 வயதுக்கும் குறைவு என்பது இன்னும் அதிர்ச்சி அளிக்க கூடிய விஷயமாக மாறியுள்ளது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications