7 நாட்களுக்கு பின் தமிழகத்தில் கொரோனா மீண்டும் வேகம்.. ரேபிட் டெஸ்டில் பாசிட்டிவ் இல்லை.. ஆனாலும்!?
தமிழகத்தில் 7 நாட்களுக்கு பின் கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் 7 நாட்களுக்கு பின் கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஏப்ரல் 12ம் தேதிக்கு பிறகு இப்போது மீண்டும் தமிழகத்தில் கொரோனா தீவிரம் அடைந்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டு வந்த கொரோனா மீண்டும் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. இன்று தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தனை நாட்கள் தமிழகத்தில் கொரோனா கொஞ்சம் தீவிரம் குறைந்து இருந்தது.
ஆனால் இன்று மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,477 ஆக அதிகரித்துள்ளது. ஒரே ஆறுதல் இன்று கொரோனா காரணமாக வரும் தமிழகத்தில் பலியாகவில்லை.

மீண்டும் வேகம்
தமிழகத்தில் 7 நாட்களுக்கு பிறகு மிக வேகமாக கொரோனா பரவ தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி 77 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அதேபோல் ஏப்ரல் 11ம் தேதி 58 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அதன்பின் ஏப்ரல் 12ம் தேதி ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அதன்பின் தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா வேகம் குறைய தொடங்கியது.

வேகம் குறைந்தது
முக்கியமாக ஏப்ரல் 13ம் தேதி 98 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அதன்பின் ஏப்ரல் 14ம் தேதி 31 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. ஏப்ரல் 15ம் தேதி 38 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அதன்பின் மிக முக்கியமாக ஏப்ரல் 16ம் தேதிதான் மிக குறைவாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஏப்ரல் 16ம் தேதி மிக குறைவாக 25 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

மோசமான நிலை
ஆனால் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் வேகம் எடுத்தது.ஏப்ரல் 17ம் தேதி 56 பேருக்கு கொரோனா ஏற்பட்டது . ஏப்ரல் 18ம் தேதி 49 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் 7 நாட்களுக்கு பின் மீண்டும் இன்று 105 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இரட்டை இலக்கங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் இன்று மீண்டும் மூன்று இலக்கத்தை தமிழகம் அடைந்துள்ளது.

பாசிட்டிவ் இல்லை
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் தமிழகத்தில் ராபிட் கிட் மூலம் கொரோனா சோதனை வேகமாக செய்யப்பட்டு வருகிறது . இன்று மட்டும் 5840 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதில் பலர் ராபிட் டெஸ்ட் செய்யப்பட்ட நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக இதுவரை 40876 கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 35741 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

ராபிட் டெஸ்ட் ரிசல்ட்
இன்று கொரோனா ராபிட் சோதனை எதிலும் கொரோனா பாசிட்டிவ் என்று வரவில்லை. அதனால் ராபிட் டெஸ்ட் காரணமாக இன்று வேகமாக வந்த ரிசல்ட் மூலம் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்பது உறுதியாகிறது. சாதரணமாக செய்யப்பட பிசிஆர் டெஸ்ட் மூலம்தான் புதிய நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா வேகம் குறையவில்லை என்று புலனாகிறது.

கொரோனா குறையவில்லை
இதனால் தமிழகத்தில் கொரோனா குறையவில்லை. மாறாக வேகம் எடுத்துள்ளது என்பது தெரிகிறது. தமிழகம் கொரோனாவை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்படுத்துகிறது. நமது மாநிலத்தில் கிராப் கீழே போக தொடங்கி உள்ளது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கிராப் உயர தொடங்கி உள்ளது. இதனால் தமிழகம் எப்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீளும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications