தோல்வி அடைந்த "ஆபரேஷன் கண்டெயின்மெண்ட்".. அனைத்து ஏரியாவிலும் பரவிய கொரோனா.. சென்னையில் அதிர்ச்சி!
சென்னையில் இருக்கும் அனைத்து மண்டலங்களிலும் கொரோனா பரவி இருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: சென்னையில் இருக்கும் அனைத்து மண்டலங்களிலும் கொரோனா பரவி இருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதன் மூலம் 1629 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து மொத்தம் 949 பேர் குணமடைந்துள்ளனர்.
சென்னையில்தான் தமிழகத்தில் அதிகமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் சென்னையில் 15 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 378 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஏற்கனவே 8 மருத்துவர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இரண்டு மண்டலம்
சென்னை முழுக்க கொரோனா பரவி இருந்தாலும் கூட இரண்டு மண்டலங்களில் மட்டும் கொரோனா பரவாமல் இருந்தது. சென்னையில் இருக்கும் மணலி மற்றும் அம்பத்தூர் மண்டலங்களில் யாருக்கும் கொரோனா ஏற்படாமல் இருந்தது. இந்த மண்டலங்களை பின்பற்றி மற்ற மண்டலங்களும் கொரோனாவில் இருந்து மீளும் என்றுதான் எல்லோரும் நம்பினார்கள். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

அம்பத்தூர் மண்டலம்
நேற்று முதல்நாள் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருந்த அம்பத்தூர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது. அங்கு முதல் நபருக்கு கொரோனா ஏற்பட்டது. அம்பத்தூரில் 6 லட்சம் பேருக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். அம்பத்தூர் மண்டலத்தில் முக்கியமான இடங்களான அம்பத்தூர், பாடி,கொரட்டூர், கள்ளிக்குப்பம்,அண்ணா நகர் மேற்கு விரிவு,முகப்பேர்,புதூர் மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆகிய பகுதிகள் உள்ளது.

மணலி மண்டலம்
இதில் ஒரு பகுதியில் உள்ள நபருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. விதிமுறை கருதி அவரின் ஏரியா வெளியிடப்படவில்லை. இதனால் அம்பத்தூரும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து தற்போது மணலியில் இன்னொரு நபருக்கு கொரோனா ஏற்பட்டது. மணலியில் மக்கள் தொகை ஏறத்தாழ 80 ஆயிரம் ஆகும். தற்போது இந்த இரண்டு மண்டலத்திலும் கொரோனா ஏற்பட்டுள்ளது.

எல்லா ஏரியாவிலும் பரவியது
இதன் மூலம் சென்னையில் அனைத்து ஏரியாவிலும் கொரோனா பாதிக்கப்பட்ட ஏரியாவாக மாறியுள்ளது. சென்னையில் எந்த இடமும் கிரீன் சோன் பகுதியாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது கண்டெயின்மென்ட் ஆபரேஷனில் தோல்வி காரணமாக ஏற்பட்டது என்கிறார்கள். சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கன்டெய்ன்மெண்ட் ஆபரேஷன் எனப்படும் பிளான் கொண்டு வரப்பட்டது. சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீட்டை சுற்றி இருக்கும் 5 கிமீ பகுதிக்கு கன்டெய்ன்மெண்ட் சோன் அமைப்பார்கள்.

தோல்வி அடைந்தது
இதை தமிழில் கட்டுப்பாட்டு பகுதி என்று அழைக்கலாம். இந்த 5 கிமீ பகுதிக்குள் அதிகாரிகள் மொத்தமாக களமிறக்கப்பட்டு வீடு வீடாக செல்வார்கள். எல்லா வீட்டிலும் யாருக்கும் எல்லாம் காய்ச்சல் உள்ளது, யாருக்கு எல்லாம் கொரோனா அறிகுறி உள்ளது என்று பார்ப்பார்கள். அதோடு அவர்கள் இருக்கும் பகுதியை சுற்றி 8 கிமீ பகுதிக்கு பஃபர் சோன் அமைப்பார்கள். இப்படி பஃபர் அமைக்கப்பட்ட பகுதியில் இருந்து மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது.

மக்கள் வெளியே வந்தனர்
ஆனால் இதையும் மீறி மக்கள் சென்னையில் பல இடங்களில் வெளியே வந்தனர் . பலர் கூட்டம் கூட்டமாக பைக் மற்றும் கார்களில் சுற்றி வருகிறார்கள். சென்னையில் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் கூட ஏற்பட்டது. இப்படி மக்கள் தனி மனித விலகலை கடைபிடிக்காமல் இருந்ததும், சரியாக காண்டாக் டிரேசின் செய்யாமல் இருந்ததும்தான் சென்னையில் இந்த ஆபரேஷன் தோல்வி அடைய காரணம் என்கிறார்கள். இதன் விளைவாக சென்னையில் அனைத்து ஏரியாவிலும் கொரோனா ஏற்பட்டுள்ளது.

உண்மையான நிலை என்ன
கொரோனா பாதிப்பு குறித்து சென்னையில் மண்டல வாரியான விவரங்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் திருவொற்றியூர் பகுதியில் பேருக்கு 13 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வளசரவாக்கம் பகுதியில் 10 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அடையாறு 7 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தேனாம்பேட்டையில் 44 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தண்டையார்ப்பேட்டையில் 46 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மண்டல வாரிய விவரம்
திருவிக நகரில் 45 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பெருங்குடியில் 8 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கோடம்பாக்கத்தில் 36 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அண்ணாநகரில் 32 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாதவரத்தில் 3 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.சோழிங்கநல்லூரில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆலந்தூரில் 7 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அம்பத்தூர், மணலியில் தலா ஒன்று. ராயபுரத்தில் 117 பேருக்கும் பரவி உள்ளது.












Click it and Unblock the Notifications