மக்களே.. 2 கட்டத்தை தாண்டி விட்டோம்.. இனிதான் கவனம் தேவை.. 3வது கட்டத்துக்கு நம்மை கொண்டு போய்விடும்
கூட்டம் கூடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்
சென்னை: அஜாக்கிரதையால் எங்கே நம்மை கொண்டுபோய் கொரோனாவின் 3-வது அபாய கட்டத்திற்குள் மக்கள் நிறுத்தி விடுவார்களோ என்று அச்சமாக உள்ளது... இன்னும் நிலைமையை மக்கள் சரிவர புரிந்து கொள்ளாமல் உள்ளனர்!
Recommended Video
கொரோனா வைரஸ் தொற்று நோய் இந்தியாவில் 2-ம் கட்டத்தில் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஏற்கனவே தெரிவித்துள்ளது.
இப்போதைக்கு இந்த நோய்த்தொற்று உள்ள நாடுகளிலிருந்து நம் நாட்டிற்கு வந்தவர்கள் அல்லது ஏற்கனவே கொரோனா நோய்தொற்று இருக்கும் நபர்களுடன் தொடர்பு கொண்டவர்களுக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பரவுகிறது... இதுதான் தற்போதைய நிலவரம்.

4 கட்டங்கள்
இந்த வைரஸ் பரவலில் மொத்தம் 4 கட்டங்கள் உள்ளதாகவும் இந்திய மெடிக்கல் கவுன்சில் சொல்கிறது. வேறொரு நாட்டிலிருந்து நோய்தொற்றுடன் இந்தியாவிற்கு வந்தவர்கள்... இதுதான் முதல்கட்டம்.. இதை நாம் எப்போதோ தாண்டிவிட்டோம்... வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் இந்தியாவில் தொற்றுநோயை பரப்பியதால் முதல் கட்டத்தை இந்தியா தாண்டிவிட்டது என்பது அர்த்தம்.

2-வது கட்டம்
அதனால் இரண்டாவது கட்டத்தில், இந்த தொற்று உள்ளது.. இது உள்ளூர் மட்டத்தில் வேகமாகவும் பரவி வருகிறது.. வெளிநாட்டுக்கு சென்று, நம் நாடு திரும்பி வந்த நோய்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொண்டவர்களுக்கும் தொற்று பரவுகிறது. இதைதான் நாம் கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகிறோம்.

சமுதாய பரிமாற்றம்
3-வது கட்டம் என்பது ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் பரவ கூடியது.. இதற்கு சமுதாய பரிமாற்றம், அதாவது Community transmission என்று சொல்வார்கள்.. இது எந்த காரணத்தை கொண்டும் நமக்கு வந்துவிடக்கூடாது, இதற்குள் நாம் சிக்கி கொள்ள கூடாது என்பதே தற்போதைய கலக்கமும், எதிர்பார்ப்பும் ஆகும். இதை பற்றி தான் அரசு மிகுந்த கவலையும் கொண்டுள்ளது. இந்த 3வது கட்டத்துக்குள்தான் நாம் நுழையாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.. சுருக்கமாக சொன்னால், ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருடன் நாம் நேரடியாக தொடர்பே கொள்ளவில்லை என்றாலும், இந்த தொற்று பரவிவிடும்.. நேரடியாக மொத்த சமுதாயத்தையும் தாக்கும்.. அதனால்தான் சமுதாய பரிமாற்றம் என்று பெயர்!!

தனிமைப்படுத்துதல்
இதற்காக மக்கள் யாரும் ஒரே இடத்தில் கூட கூடாது.. பயணம் செய்ய கூடாது.. தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று திரும்ப திரும்ப நினைவுபடுத்தி கொண்டுள்ளார்கள்.. ஆனால் எதற்காக இதை வலியுறுத்தப்படுகிறதோ அது அத்தனையையும் நம் மக்கள் காற்றில் பறக்கவிட்டு கொண்டுள்ளனர். ஆனால் கூட்டமாக கூட கூடாது என்பதை மறந்துவிட்டு, காய்கறி கடைகளிலும், மளிகை கடைகளிலும், சூப்பர் மார்கெட்டுகளிலும் அளவுக்கு அதிகமான மக்கள் கூட்டம் கூடுகிறார்கள்.

நெரிசல்
ஞாயிற்றுக்கிழமை கடைகள் இருக்காது என்பதை திடுதிப்பென்று அரசு அறிவிக்கவில்லை.. 3, 4, நாள் டைம் உள்ளது.. ஆனாலும் பொதுமக்கள் கடைகளில் நெரிசலுக்குள் காய்கறிகளை, மளிகை பொருள்களை வாங்கி கொண்டுள்ளனர்.. கொரொனா வந்து விடும் என்ற பயத்தை விட ஞாயிற்று கிழமைகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம்தான் அதிகமாக உள்ளது.. எல்லாவற்றிற்கும் மேலாக, பால் பழங்கள் கிடைக்காதோ என்ற பயம்தான் மக்களிடம் பார்க்க முடிகிறது

அன்புமணி ராமதாஸ்
டாக்டர் அன்புமணி ராமதாஸ் 4 நாளைக்கு முன்பு ஒரு ஆங்கில தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி தந்திருந்தார்.. அதில் "31-ம் தேதி வரை கடைகள், கல்வி நிறுவனங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. பொதுமக்கள் கூட்டமாக கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.. ஆனால், கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே தீர்வு முழு அடைப்புதான். கண்டிப்பாக மிகப்பெரிய பாதிப்பு இந்தியாவுக்கு ஏற்படலாம்.. கொரோனாவை எதிர்கொள்ளும் அளவுக்கு மருத்துவ கட்டுமானம் நம் நாட்டில் இல்லை.. முழு அடைப்புதான் கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரே வழி.. வணிகமா? உயிரா? என்றால் உயிர்தான் முக்கியம்.. வணிகத்தை பிறகு பார்த்து கொள்ளலாம்" என்று தெரிவித்திருந்தார்.

பால், பழம்
பிரதமர் அறிவிப்புக்கு முன்பு அன்புமணி விடுத்த கோரிக்கை இது என்றாலும், உயிருக்கு அடுத்தபடியாகவே வணிகத்தை பார்க்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளது 100 சதவீதம் உண்மை.. என்ன காரணத்திற்காக கூட்டமாக கூட கூடாது ஞாயிற்று கிழமை வீட்டில் இருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டதோ அந்த காரணம் பயனே இல்லாமல் போய்விட்டது.. பால் கிடைக்காமல் போய்விடுமோ, பழங்கள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பீதியில் நெரிசலையும் பொருட்படுத்தாமல் கடைகளுக்குள் அசால்ட்டாக மக்கள் நுழைந்து கொண்டுள்ளனர்.

அக்கறை
அதேபோல, பயணம் செய்யக்கூடாது என்று சொன்னாலும் அதன் அர்த்தத்தையும் யாரும் சரியாக புரிந்து கொள்ளவில்லை.. ஊர் போய் சேர்ந்துவிடலாம் என்றுதான் நினைக்கிறார்களே தவிர, இருக்கும் இடத்திலேயே தங்களை தனிமைப்படுத்தி கொள்ளலாம் என்ற அக்கறை வரவில்லை.. அதைவிட யாருக்கும் கொஞ்சம்கூட பயமே வரவில்லை.

நெரிசல்
4 பேர் ஒன்றாக சேர்ந்து நிற்கவோ, பேசவோ கூடாது என்று அறிவுறுத்தும்போது இதைகூட புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மக்கள் சுயநலமாகவே யோசித்து வருகின்றனர்... கிட்டத்தட்ட "தினசரி ஊரடங்கு உத்தரவு" போலதான் இதுவும்.. ஞாயிற்றுக்கிழமை என்று ஒருநாள் மட்டும் கணக்கில் இதை எடுத்து கொள்ளக்கூடாது.. மார்க்கெட், கடைகள், பஸ்கள் என கூட்ட நெரிசலை பார்க்கும்போது, கொரொனா தொற்று எளிதாக பரவ இதை விட வேறு என்ன வேண்டும்? மக்கள் சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்ததுபோல என்று தான் நினைக்க தோன்றுகிறது.

வெளியே வர வேண்டாம்
நம்மை முழுமையாக தனிமைப்படுத்திக் கொள்வது மட்டுமே இதை ஒழிக்க ஒரே வழி.. வீட்டுக்குள்ளேயே முடிந்தவரை தனிமையில் இருப்பது நல்லதுதான். வெளியில் வராதீங்க. நாளை என்று இல்லை.. இன்னும் 2 வாரங்களுக்கு நமக்கு ரிஸ்க் அதிகம் இருக்கிறது. எனவே 2 வாரத்திற்கு தேவையில்லாமல் வெளியில் வராதீங்க.. தேவையான பொருட்கள் கண்டிப்பாக கடைகளில் இருக்கும், கிடைக்கும்... எனவே பதட்டம் வேண்டியதே இல்லை... நம்மைக் காப்பதை விட நாம் வாழும் இந்த பூமியை உலுக்கி எடுத்து வரும் கொரோனாவை வெல்வதுதான் இப்போது முக்கியம்.

வியாபாரிகள்
சில கடைகளில் பொதுமக்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி கூட தருவதில்லை.. கடையில் கூட்டம் இருப்பது, கடை ஊழியர்களுக்கும் மட்டுமல்ல, அந்தந்த கடை ஓனர்களுக்கும் ஆபத்து என்பதும் தெரிவதில்லை.. அதற்கு பதிலாக சிறப்பு சலுகைகள் அறிவித்து கல்லா கட்டி வருகின்றனர்... கடைகளில் சுய கட்டுப்பாடு என்பது கொஞ்சமும் இல்லை.. எந்த ஒரு சமூக இடைவெளி இல்லாமல் கூட்டத்துடன் கூட்டமாக வியாபாரம் நடந்து வருகிறது.. இதனை வணிக சங்கங்கள் கூட கண்காணித்து தவிர்க்க நடவடிக்கை எடுக்கலாம்.. தானாகவே முன்வந்து வணிக சங்கங்கள் இதில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள விழைய வேண்டும்.. ஒவ்வொருவராக பாதிக்கப்பட்டுவிட்டால், ஆஸ்பத்திரிகளில் ஏற்படும் அவசரத்தை டாக்டர்களால் மட்டும் எப்படி சமாளிக்க முடியும் என்பதையும் மக்கள் கொஞ்சமாவது யோசித்து பார்க்க வேண்டும்.

அஜாக்கிரதை வேண்டாம்
காற்றில்கூட இந்த வைரஸ் சில மணி நேரங்கள் உயிர் வாழும் என்கிறார்கள்.. பெரியவர்கள் மட்டுமில்லாமல் சின்ன பசங்களையும் தாக்கும் என்றும் சொல்கிறார்கள்.. இப்படி அஜாக்கிரதையாக 3-ம் கட்டத்துக்குள் நம் மக்கள் தானாக கொண்டு போய் இந்தியாவை நிறுத்தி விடுவார்களோ என்ற பயமும் எழுந்துள்ளது... எதையுமே நாசூக்காகதான் சொல்ல முடியுமே தவிர, பச்சையாக சொல்ல வேண்டும், அப்பட்டமாக சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார்களா? அப்படி சொல்வதானால் ஒன்றே ஒன்றுதான் சொல்ல முடியும்.. அசால்ட்டாக இருந்தால் ஆண்டவனால்கூட யாரையும் காப்பாற்ற முடியாது!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications