கொரோனா.. மோசமாக பாதித்த கேரளா, தமிழகம்.. குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு.. மத்திய அரசு ஷாக்கிங் முடிவு!
கொரோனாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்காக மத்திய அரசால் மாநில பேரிடர் மேலாண்மை நிதியத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: கொரோனாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்காக மத்திய அரசால் மாநில பேரிடர் மேலாண்மை நிதியத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதில் தமிழகம், கேரளா பெரிய அளவில் புறக்கணிக்கப்பட்டு உள்ளது.
Recommended Video
இந்தியாவில் 3730 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இதில் மகாராஷ்டிரா, தமிழகம், கேரளா மிக மோசமாக பாதித்த மாநிலங்கள் ஆகும். மகாராட்டிராவில் 635, தமிழகத்தில் 485, கேரளாவில் 306, டெல்லியில் 445, தெலுங்கானாவில் 272, ஆந்திராவில் 224 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் 234, ராஜஸ்தானில் 210, மத்திய பிரதேசத்தில் 179 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். எப்போதும் போல கொரோனா நிதியில் தென்னிந்திய மாநிலங்கள் இந்த முறை புறக்கணிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா எப்படி
கொரோனாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்காக மத்திய அரசால் மாநில பேரிடர் மேலாண்மை நிதியத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை நிதியம் (எஸ்.டி.ஆர்.எம்.எஃப்) கீழ் அனைத்து மாநிலங்களுக்கும் மொத்தமாக ரூ .11,092 கோடியை விடுவித்து இருக்கிறது. ஆனால் இதில் என்ன சிக்கல் என்றால் மாநிலங்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு இருக்கிறதோ அதை கருத்தில் கொண்டு பணம் ஒதுக்கப்படவில்லை. மாறாக மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு பணம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

உதாரணம்
உதாரணமாக இந்தியாவில் 10 மாநிலங்களில் வெள்ளம் வருகிறது. சிறிய மாநிலத்தில் மோசமான அளவில் 10 அணைகள் உடைகிறது. சேதம் ஏற்படுகிறது. ஆனால் பெரிய மாநிலம் ஒன்றில் ஒரே ஒரு அணை உடைகிறது, சேதமும் பெரிதாக இல்லை. ஆனால் நிதி ஒதுக்கும் போது பெரிய மாநிலம் என்பதற்காக சேதம் இல்லாத மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்கி, சேதம் அதிகம் உள்ள சிறிய மாநிலத்திற்கு குறைவாக நிதி ஒதுக்கினால் எப்படி இருக்கும். அப்படி ஒரு செயலைத்தான் மத்திய அரசு செய்துள்ளது.

தமிழகம் ஏமாற்றம்
நேற்று ஒதுக்கப்பட்ட கொரோனா நிதியில் வெறும் 510 கோடி ரூபாய்தான் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது . கொரோனா நிதியாக தமிழக அரசு முதல் கட்டமாக 3500 கோடி ரூபாயும், அடுத்த கட்டமாக 4500 கோடி ரூபாயும் கேட்டது. ஆனால் தமிழகத்திற்கு வெறும் 510 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்து தமிழகத்தில்தான் அதிக பேருக்கு கொரோனா உள்ளது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரா நிலை
இந்தியாவில் மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவுக்கு ரூ.1,611 கோடி நிதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் மகாராஷ்டிராவிற்கு இணையாக பாதிப்பு அடைந்துள்ள கேரளாவுக்கு ரூ.157 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. கேரளா கடந்த மூன்று வருடங்களாக வெள்ளம், நிப்பா உள்ளிட்ட பேரிடர்களை சந்தித்த மாநிலம். கேரளாவிற்கு அப்போதே பெரிய அளவில் நிதி உதவி வழங்கப்படவில்லை.

கேரளாவில் வெள்ளம் வந்த போது
கேரளாவில் வெள்ளம் வந்த போது வெளிநாட்டு நிதியை பெற மத்திய அரசு அனுமதிக்கவில்லை. ஆனால் தற்போது கொரோனா காரணமாக மத்திய அரசு வெளிநாட்டு நிதியை பெற முடிவு செய்துள்ளது. அதேபோல் கொரோனா காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கும் மற்றும் நிறைய உயிர் சேதங்களை சந்தித்துள்ள தெலுங்கானாவிற்கு ரூ.224 கோடிதான் ஒதுக்கப்பட்டு உள்ளது.

தென்னிந்தியா நிலை
தென்னிந்தியாவில் உள்ள வேறு சில மாநிலங்களான ஆந்திராவுக்கு ரூ.505 கோடியும், கர்நாடகத்துக்கு ரூ.395 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டில் தென் மாநிலங்கள், பாஜக ஆளாத மாநிலங்கள் பெரிய அளவில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக மேற்கு வங்கத்துக்கு ரூ.505.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பாஜக கூட்டணி ஆளும் பீகாருக்கு ரூ.710 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் எப்படி
பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்துக்கு ரூ.966 கோடி, மத்தியப் பிரதேசத்துக்கு ரூ. 910 கோடி செய்யப்பட்டுள்ளது. இந்த மாநிலங்கள் எல்லாம் தமிழகம் கேரளா அளவிற்கு கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. ஆனாலும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா மிக மோசமான பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த குறைந்தபட்ச நிதி எப்படி மாநில அரசுக்கு போதுமானதாக இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications