தமிழகத்தில் இன்று 5697 பேருக்கு கொரோனா.. மொத்தமாக 514280 பேர் பாதிப்பு.. நம்பிக்கை தரும் சென்னை!
சென்னை: 5697 பேருக்கு இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 514208 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்பட்டது. பேருந்து போக்குவரத்து தொடங்கி, இ பாஸ் ரத்து வரை நிறைய தளர்வுகள் தமிழகத்தில் அமலுக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் சராசரியாக 5900 கொரோனா கேஸ்கள் பதிவாகி வந்தது.
அதன்பின் தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் தினமும் ஒரே அளவில் கொரோனா கேஸ்கள் 6000க்கும் குறைவாக பதிவாகி வருகிறது.

தமிழகம் எப்படி
5697 பேருக்கு இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 514208 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மொத்தம் 150572 பேர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளது.சென்னையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை 9883 ஆக உள்ளது. இன்று மட்டும் சென்னையில் 989 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

நீண்ட காலம் எப்படி
நீண்ட காலத்திற்கு பின் சென்னையில் இப்படி ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 10000க்கும் கீழ் சென்றுள்ளது. ஆனால் இன்னொரு பக்கம் கோவையில் தொடர்ந்து கேஸ்கள் அதிகரித்து வருகிறது.இன்று கோவையில் 485 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 23147 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று செங்கல்பட்டில் 324 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 31067 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று சேலத்தில் 291 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 15066 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

டெஸ்ட் எண்ணிக்கை
தமிழகத்தில் கொரோனா சோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்தை கடந்துள்ளது. 6048832 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று 80623 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனைகளை தமிழகம் துரிதப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இன்று 78711 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 5858300 பேர் தமிழகத்தில் கொரோனா சோதனை செய்யப்பட்டு உள்ளனர்.

சிகிச்சை பெறும் நோயாளிகள்
தமிழகத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 46806 ஆக உள்ளது. தமிழகத்தில் இன்று 5735 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 458900 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.தமிழகத்தில் மொத்தம் 8502 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 68 பேர் பலியாகி உள்ளனர்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications