ஒரே நாள்.. கலங்க வைத்த திருப்பூர்.. கொங்கில் வேகம் எடுத்த கொரோனா.. சென்னையிலும் மோசம்.. முழு நிலவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக திருப்பூரில்தான் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 60 பேருக்கு திருப்பூரில் கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளது.

Recommended Video

    கொரோனா பாதிப்பு தமிழக மாவட்டங்கள் 3 வண்ணங்களாக பிரிப்பு

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இன்னும் மொத்தம் 34 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 50 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர.

    தமிழகத்தில் கொரோனாவால் பாதிகப்பட்டோரின் எண்ணிக்கை 1075 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.

    சென்னை நிலை

    சென்னை நிலை

    இந்த நிலையில் தமிழகத்தில் எங்கெல்லாம் கொரோனா ஏற்பட்டுள்ளது என்ற விவரம் வெளியாகி உள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தமாக சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 199 ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகபட்சமாக திருப்பூரில்தான் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 60 பேருக்கு திருப்பூரில் கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளது. கோவையில் மேலும் 22 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதிப்பு 119ஆக அதிகரித்துள்ளது.

    கொங்கு மாவட்டம்

    கொங்கு மாவட்டம்

    அதேபோல் ஈரோட்டில் இன்று மட்டும் 4 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 64 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கொங்கு மாவட்டங்களில் கொரோனா தீவிரம் எடுத்துள்ளது. திண்டுக்கல்லில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 56 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலியில் மொத்தம் 56 பேருக்கு கொரோனா உள்ளது. நாமக்கல்லில் 43 பேருக்கு கொரோனா உள்ளது. இன்று இரண்டு பேருக்கு கொரோனா ஏற்பட்டது.

    சென்னைக்கு அருகில்

    சென்னைக்கு அருகில்

    செங்கல்பட்டில் 43 பேருக்கு கொரோனா உள்ளது. திருச்சியில் 43 பேருக்கு கொரோனா உள்ளது. தேனியில் 41 பேருக்கு கொரோனா உள்ளது. ராணிப்பேட்டையில் 39 பேருக்கு கொரோனா உள்ளது. திருவாரூரில் 29 பேருக்கு கொரோனா உள்ளது. கரூரில் 25 பேருக்கு கொரோனா உள்ளது. நாகப்பட்டினத்தில் 24 பேருக்கு கொரோனா உள்ளது. தூத்துக்குடியில் 24 பேருக்கு கொரோனா உள்ளது.

    வடமாவட்டம் மற்றும் டெல்டா

    வடமாவட்டம் மற்றும் டெல்டா

    விழுப்புரத்தில் 23 பேருக்கு கொரோனா உள்ளது. கடலூரில் 19 பேருக்கு கொரோனா உள்ளது. சேலத்தில் 17 பேருக்கு கொரோனா உள்ளது. திருப்பத்தூரில் 16 பேருக்கு கொரோனா உள்ளது. கன்னியாகுமரியில் 15 பேருக்கு கொரோனா உள்ளது. திருவாரூரில் 13 பேருக்கு கொரோனா பேருக்கு கொரோனா உள்ளது. வேலூரில் 12 பேருக்கு கொரோனா உள்ளது. தஞ்சாவூரில், திருவண்ணாமலை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா 11 பேருக்கு கொரோனா உள்ளது.

    நீலகிரி நிலை

    நீலகிரி நிலை

    நீலகிரியில் 9 பேருக்கு கொரோனா உள்ளது. காஞ்சிபுரத்தில் 8 பேருக்கு கொரோனா உள்ளது. சிவகங்கையில் 6 பேருக்கு கொரோனா உள்ளது. தென்காசியில் 4 பேருக்கு கொரோனா உள்ளது. கள்ளக்குறிச்சியில் 4 பேருக்கு கொரோனா உள்ளது. ராமநாதபுரத்தில் 2 பேருக்கு கொரோனா உள்ளது. அரியலூர், பெரம்பலூரில் தலா ஒருவருக்கு கொரோனா உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+