என்னாச்சு சென்னைக்கு.. எகிறும் பாதிப்பு.. கோவையில் குறைகிறது தொற்று.. தீவிரத்தில் தமிழக அரசு
கோவை உட்பட கொங்குவில் தடுப்பூசி செலுத்தும் பணி துரிதமாகி வருகிறது
சென்னை: சென்னையில் தொற்று பாதிப்பு சற்று அதிகரித்து வரும் நிலையில், கோவையில் குறைந்து வருகிறது.. கடந்த சில தினங்களாகவே கொங்கு மண்டலத்தில் தொற்று பாதிப்பு குறைந்து காணப்படுகிறது.. அதேசமயம் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மும்முரமாகி வருகின்றன.
தமிழகத்தில் முற்றிலும் தொற்று பாதிப்பு நீங்கவில்லை.. அதேசமயம் குறைந்து காணப்படுகிறது.. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,467 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது...
நேற்று ஒரே நாளில் மட்டும் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.. சுகாதாரத் துறை நேற்றைய தினம் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது.. அதில், புதிதாக 1,467 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,69,962-ஆக உயர்ந்துள்ளது.

சென்னை
தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சென்னையில் சற்று அதிகரித்துள்ளது... ஆனால், சென்னையுடன் ஒப்பிடுகையில் கோவையில் பாதிப்பு குறைந்து வருகிறது.. சென்னையில் ஏற்கெனவே 184 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 181-ஆக அதிகரித்துள்ளது... கோவையில் அதிகரித்திருந்த வைரஸ் பாதிப்பு 155-ஆக குறைந்துள்ளது.

தடுப்பூசிகள்
இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு -103, தஞ்சாவூர் -90, ஈரோடு -88, திருவள்ளூர் 60, சேலம் -51, திருச்சி -50, நாமக்கல் 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.12 வயதுக்குட்பட்ட 94 குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது... கடந்த 4 மாதங்களுக்கு முன்புவரை கொங்கு மண்டலத்தில் தொற்று அதிகமாகி கொண்டே போனது.. ஒருகட்டத்தில் சென்னையைவிட அதிக பாதிப்பு கோவைக்குதான் ஏற்பட்டது.. இதற்கு பிறகுதான் சுகாதார துறை கூடுதல் கவனம் தொற்றை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டது.

கோவை
3வது வைரஸ் பரவல் வரஉள்ள நிலையில், கோவைக்குதான் அதிக பாதிப்பு என்று ஏற்கனவே டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.. இதன்காரணமாக தடுப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் இறங்கி உள்ளனர். மேலும் பக்கத்து மாநிலமான கேரளாவில் தொற்று உச்சத்தில் உள்ளதால், அங்கிருந்தும் தமிழகத்தின் எல்லைகளுக்கு வந்துவிடகூடாது என்ற கண்காணிப்பும் முடுக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது... நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகினர்... மாவட்டத்தில் மேலும் 33 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது... இப்போதைக்கு தொற்று பாதிப்பால் 376 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்...

தடுப்பூசி முகாம்
அதேபோல ஈரோடு மாவட்டத்திலும், தடுப்பூசி கிடைக்கும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த மாதம் 12, 19 மற்றும் 26-ந் தேதிகளில் 3 கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. ஈரோடு மாநகராட்சியில் 21 ஆயிரத்து 900 பேருக்கும், மாவட்டம் முழுவதும் 95 ஆயிரம் பேருக்கும் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது.

வாக்குச்சாவடி
சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அவ்வப்போது சிறப்பு மையங்கள் மூலமாகவும், ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது... 18 வயதிற்கு மேற்பட்ட 16 லட்சத்து 63 ஆயிரத்து 265 பேருக்கு முதல் தவணையும், 5 லட்சத்து 40 ஆயிரத்து 596 பேருக்கு இரண்டாம் தவணையும் செலுத்தப்பட்டுள்ளது.. தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications