இங்கே பாருங்க.. எங்கு திரும்பினாலும் "தல" இதுதான் சூப்பர் குவாரன்டைன்.. திமுக எம்எல்ஏ போட்ட வீடியோ
21 நாட்கள் வீட்டிலேயே இருங்க என்று டிஆர்பி ராஜா ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.. வீடு முழுக்க அஜித் தான் இருக்கிறார்.. எங்கு திரும்பினாலும் அஜித்தான்.. #தல வீட்லயே இருக்காரு. நீங்க ??? என்று கேட்டு திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.
Recommended Video
எம்எல்ஏ டிஆர்பி ராஜா ட்விட்டர் பக்கத்தில் எப்போதுமே சுவாரஸ்யங்கள் ஒளிந்திருக்கும்.. வித்தியாசமான பதிவுகளை போட்டு கொண்டே இருப்பார்.

சில பதிவுகள் காமெடியாகவும், சில பதிவுகள் சிந்திக்க கூடியதாகவும் இருக்கும்.. அந்த வகையில் இப்போது ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.
21 நாட்கள் வீட்டிலேயே இருக்கும்படி பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.. ஒட்டுமொத்த நாடும் லாக் அவுன் செய்யப்பட்டுள்ளது.. இந்த 21 நாளும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதை டிஆர்பி ராஜா வலியுறுத்திதான் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இவர் ஒரு அஜித் ரசிகர் போலும்.. #தல வீட்லயே இருக்காரு. நீங்க ??? வீட்டிலேயே இருங்கள் 🙏🏽 #கொரோனா.. வரும்முன் காப்போம் 🙏🏽 #Thala IS STAYING AT HOME.. And SO SHOULD YOU 🙏🏽" என்று பதிவிட்டுள்ளார்.
#தல வீட்லயே இருக்காரு.
— T R B Rajaa (@TRBRajaa) March 25, 2020
நீங்க ???
வீட்டிலேயே இருங்கள் 🙏🏽 #கொரோனா வரும்முன் காப்போம் 🙏🏽 #Thala IS STAYING AT HOME.
And SO SHOULD YOU 🙏🏽#StayHomeTN #StayHomeIndia#StayHomeStaySafe pic.twitter.com/zT9GreVwxi
அந்த வீடியோவில் வீட்டின் கதவை திறந்து கொண்டு அஜித் உள்ளே வருகிறார்.. கதவை தாழ்ப்பாள் போடுகிறார்.. பிறகு பார்த்தால் இன்னொரு அஜித் ஒரு புத்தகத்தை எடுத்து கொண்டு நடக்கிறார்.. அந்த ஹாலில் மற்றொரு அஜித் ஹாயாக தூங்கி கொண்டிருக்கிறார்.. பக்கத்தில் ஒரு அஜித் டிவி பார்க்கிறார்.. பின்னாடி ஒரு அஜித் ஸ்நாக்ஸ் சாப்பிடுகிறார்.. முன்னாடி ஒரு அஜித் எக்சர்ஸைஸ் செய்கிறார்.. இப்படி ஏகப்பட்ட அஜித்துகள் காணப்படுகிறார்கள்.. எல்லாருமே வீட்டிற்குள் உள்ளனர்.
இதை குறிப்பிட்டுதான் தல வீட்டில் இருக்கிறார் .. அப்ப நீங்க என்று கேள்வி எழுப்பி அனைவரையும் 21 நாட்களுக்கு வீட்டிற்குள் பத்திரமாக இருக்கும்படி அறிவுறுத்துகிறார் டிஆர்பி ராஜா. இந்த ட்வீட்டுக்கு ஏகப்பட்ட பேர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.. அதில் ஒருவர் "இத்தனை தல இருந்தும் அத்தனை பேரும் #Social_Distancing யும் கடைபிடிக்கிறார்கள்..." என்றும், "ரசிக சண்டையிடும் நேரம் இதுவல்ல நண்பர்களே..." என்றும் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications