பெரிய டீம் உள்ளது.. சென்னையில் காண்டாக்ட் டிரேசிங் எப்படி நடக்கிறது.. ராதாகிருஷ்ணன் சொன்ன சீக்ரெட்!
சென்னையில் கொரோனா வைரஸ் தடுப்பிற்காக காண்டாக்ட் டிரேசிங் எப்படி செய்யப்படுகிறது என்று கொரோனா தடுப்பு சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் தடுப்பிற்காக காண்டாக்ட் டிரேசிங் எப்படி செய்யப்படுகிறது என்று கொரோனா தடுப்பு சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
சென்னையில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக சென்னை மாநகராட்சி சார்பாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளை இவர்தான் கவனித்து வருகிறார். சென்னை மாநகராட்சி கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.

பேட்டி அளித்தார்
ராதாகிருஷ்ணன் தனது பேட்டியில், கொரோனா தடுப்பிற்காக சென்னையில் பலர் களமிறக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 24 மணி நேரமும் பணி செய்து கொண்டு இருக்கிறோம். வரும் நாட்களில் முன்னேற்றம் ஏற்படும். ராயபுரம், கோடம்பாக்கம், வளசரவாக்கம், குடிசை பகுதிகள் ஆகிய நான்கு பகுதிகள் மீது கவனம் செலுத்தி வருகிறோம். இந்த பகுதிகளுக்காக தனி திட்டங்களை வகுத்து இருக்கிறோம். செயல்படுத்தி வருகிறோம்.

காண்டாக்ட் டிரேசிங் வழி
காண்டாக்ட் டிரேசிங் செய்ய முக்கிய வழிகளை கடைப்பிடித்து வருகிறோம். புதிதாக ஏதாவது ஏரியாவில் கேஸ்கள் வந்தால் உடனடியாக அங்கு விசாரணையை தீவிரமாக செய்கிறோம். இதற்காக பெரிய குழுவை வைத்துள்ளோம். ஒரு ஏரியாவில் கொரோனா கேஸ் வந்தால் எங்களுக்கு எப்படி வந்தது ? ஏன் வந்தது ? என்று தெரியும். களப்பணியாளர்கள் களத்தில் இருப்பதால் இதை எளிதாக செய்து வருகிறோம். இதனால் எளிதாக நாங்கள் காண்டாக்ட் டிரேசிங் செய்கிறோம்.

போலியோ எப்படி
போலியோவை இந்தியாவில் முதலில் கட்டுப்படுத்தியது தமிழகம்தான். அதேபோல்தான் நாம் கொரோனாவை கட்டுப்படுத்துவோம். மக்கள் ஒத்துழைப்பு தந்தால் இதை எளிதாக செய்ய முடியும். மாஸ்க்கை முகத்தில் அணிய வேண்டும். மூக்கை மூட வேண்டும். கழுத்தில் அணிய கூடாது. மாஸ்கை வாடகைக்கு வாங்க கூடாது. இதற்காக நாங்கள் மாஸ்க்கை அரசு சார்பாக இலவசமாக வழங்கி வருகிறோம்.

மாஸ்க் வழங்குகிறோம்
காசு இல்லாத மக்களுக்கு மாஸ்க் வழங்கி வருகிறோம். மாஸ்க் எப்படி அணிய வேண்டும் என்று எல்லோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதற்கு நீங்கள் உறுதுணையாக எங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். மக்கள் கூடும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். இதை செய்தால் தமிழகத்தில் நோய் பரவலை எளிதாக தடுக்க முடியும். இது வைரஸ், நோய் கிடையாது. அதனால் இதை கட்டுப்படுத்த முடியும், என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications