ஒரே நாளில் 12 பேருக்கு.. மொத்தமாக 63 பேருக்கு.. சென்னையின் எபிசென்டராக மாறிய ராயபுரம்.. என்ன நிலை?
சென்னையில் ஒரே நாளில் ராயபுரம் பகுதியில் மட்டும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது.
சென்னை: சென்னையில் ஒரே நாளில் ராயபுரம் பகுதியில் மட்டும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. சென்னை ராயபுரத்தில் மொத்தம் 63 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனா 199 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிக நபர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 106 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிகப்பட்டோரின் எண்ணிக்கை 1075 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகம் நிலை
கொரோனா வைரஸ் காரணமாக இன்னும் மொத்தம் 34 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 50 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர. அதேபோல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ராயபுரம்தான் கொரோனா காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஒரே நாளில் ராயபுரம் பகுதியில் மட்டும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. சென்னை ராயபுரத்தில் மொத்தம் 63 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை ராயபுரம்
சென்னை ராயபுரத்தில் மட்டும் மற்ற மாவட்டங்களை விட அதிகமாக கொரோனா ஏற்பட்டுள்ளது. உதாரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 34 மாவட்டங்களில் 31 மாவட்டங்களில் இருக்கும் கொரோனா நோயாளிகளை விட ராயபுரம் பகுதியில் அதிகமாக கொரோனா நோயாளிகள் உள்ளனர். மோசமாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, திண்டுக்கல், நாமக்கல் ஆகிய மாவட்டங்களை விட ராயபுரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மண்டலங்கள்
சென்னையில் மொத்தம் 15 மண்டலங்களில் 13 மண்டலங்கள் கொரோனா காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. திருவொற்றியூர், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் 4 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அடையாறு 6 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாதவரத்தில் 3 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ராயபுரத்தில் 63 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சோழிங்கநல்லூர், ஆலந்தூரில் தலா 2 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

வேறு மண்டலங்கள் எப்படி
தேனாம்பேட்டையில் 12 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தண்டையார்ப்பேட்டையில் 17 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். திருவிக நகரில் 26 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பெருங்குடியில் 6 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கோடம்பாக்கத்தில் 22 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அண்ணாநகரில் 22 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுதான் சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகள் ஆகும்.
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டேன்ஸ் ஆடும் போது தகராறு.. கார் ஏற்றி இளம்பெண் கொலை! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!











Click it and Unblock the Notifications