கொரோனா இப்போது குறையும்.. ஆனால் மீண்டும் "செகண்ட் வேவ்" தாக்கும்.. இந்தியாவிற்கு வார்னிங்!
இந்தியாவில் மழை காலம் தொடங்கும் போது மீண்டும் கொரோனா வைரஸ் வேகம் எடுக்க வாய்ப்புள்ளது, அப்போது மீண்டும் இந்தியாவில் கொரோனா வைரஸின் செகண்ட் வேவ் தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
சென்னை: இந்தியாவில் மழை காலம் தொடங்கும் போது மீண்டும் கொரோனா வைரஸ் வேகம் எடுக்க வாய்ப்புள்ளது, அப்போது மீண்டும் இந்தியாவில் கொரோனா வைரஸின் செகண்ட் வேவ் தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
Recommended Video
இந்தியாவில் தற்போது கொரோனா உச்சம் அடைந்துள்ளது. கொரோனா காரணமாக மொத்தம் 23,259 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 727 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் பரவும் கொரோனா குறித்து ஆராய்ச்சியாளர்கள் முக்கியமான சோதனைகளை செய்துள்ளார்.
பெங்களூர் ஐஐஎஸ்சி பேராசிரியர் ராஜேஷ் சுந்தரேசன், அதேபோல் டாட்டா இன்ஸ்டிடியூட் ஆப் ஃபன்டமெண்டல் ரிசர்ச் பேராசிரியர் சுந்தரேசன், சிவ் நாடார் யுனிவர்சிட்டி பேராசிரியர் சமிதி பட்டாச்சார்யா ஆகியோர் தலைமையில் நடந்த ஆராய்ச்சியில் முக்கியமான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி முடிவு என்ன?
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி முடிவில், தற்போது இந்தியாவில் கொரோனா உச்சம் அடைந்துள்ளது. இன்னும் கூட உச்சம் அடைய வாய்ப்புள்ளது. ஆனால் அதற்கு பின் போக போக கொரோனா வேகம் குறையும். தற்போது இருக்கும் லாக் டவுன் காரணமாக கொரோனா வேகம் குறைந்து மொத்தமாக எல்லோரும் அதில் இருக்கும் விடுபடும் நிலை ஏற்படும். ஆனால் அது முடிவு கிடையாது. மீண்டும் கொரோனா வேகம் எடுக்கும்.

மீண்டும் தீவிரம்
வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மீண்டும் கொரோனா இந்தியாவில் தீவிரம் அடைய வாய்ப்புள்ளது. இரண்டாம் அலை தாக்குதல்கள் இந்தியாவில் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்போது எப்படி இந்தியாவில் தனிமனித இடைவெளி இருக்கிறது என்பதை பொறுத்தே அதன் தீவிரம் குறித்து கணிக்க முடியும். திடீர் என்று கேஸ்கள் அப்போது அதிகரிக்கும். அதற்கு தயாராக இருக்க வேண்டும்.

இயல்பு நிலை என்ன
நாம் இயல்பு நிலைக்கு திரும்பிய பின் மீண்டும் கொரோனா பரவ வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். சீனாவில் தற்போது இதுதான் நடக்கிறது. இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் தற்போது குறைந்துள்ளது. இதன் மூலம் நாம் உச்சத்தை அடைந்துவிட்டோம். இனி இதன் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என்று அர்த்தம். ஆனால் விரைவில் இதன் செகண்ட் வேவ் வேகம் எடுக்க வாய்ப்புள்ளது. கொரோனா ஒருமுறை தாக்கினால் மீண்டும் தாக்காது என்று கூற முடியாது.

இரண்டு முறை தாக்கியவர்கள்
கொரோனா இரண்டு முறை தாக்கிய நபர்கள் கூட இருக்கிறார்கள். அதனால் இரண்டாம் அலை தாக்குதல் வந்தால் எல்லோரும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. யாரும் அலட்சியமாக் இருக்க கூடாது. இரண்டாம் அலை தாக்குதல்கள் மிக தீவிரமாக இருக்கும். கட்டுப்பாடுகளையும், தனி மனித விலகலையும் மேலும் நீட்டிப்பதுதான் சரியாக இருக்கும். மும்பை மற்றும் பெங்களூரில் செய்யப்பட சோதனை முடிவுகள் இதைத்தான் காட்டுகிறது.

இரண்டாம் அலை என்ன?
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவ நிறைய வாய்ப்புள்ளது. ஒவ்வொரு பகுதிகளிலும் கொரோனா பரவும் நிலை ஏற்படும். அதை எல்லாம் தடுக்க முடியாது. இப்போதே முடிந்த அளவு கொரோனா பாதிக்கப்பட்ட எல்லோரையும் கண்டுபிடித்து மொத்தமாக சோதனை செய்து,எல்லோரையும் கொரோனா பாதிப்பில் இருந்து விடுவித்தால் மட்டுமே இந்த சிக்கலில் இருந்து மீள முடியும்.

இன்னும் முழுமையாக இல்லை
இந்தியாவில் இன்னும் முழுமையாக கொரோனாவிற்கு எதிரான இம்யூனிட்டி இல்லை. இதனால் மொத்தமாக இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை அதை தடுக்க முடியாது. முழுமையாக மருந்து வரும் வரை மக்கள் கவனமாக இருக்க வேண்டும். அதோடு மழை காலங்களில் இந்தியாவில் அதிகமாக நோய்கள் பரவும். அது குறித்தும் நாம் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும், என்று அவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications