ஒன்றாக மீளும் தமிழகம், கேரளா.. குறையும் கொரோனா பாதிப்பு.. நிம்மதி தரும் புள்ளி விவரம்.. செம நியூஸ்!
தமிழகமும் கேரளாவும் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனாவில் இருந்து மீண்டும் வருகிறது.
சென்னை: தமிழகமும் கேரளாவும் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனாவில் இருந்து மீண்டு வருகிறது. இன்னும் சில வாரங்களில் இரண்டு மாநிலங்களும் மொத்தமாக கொரோனாவில் இருந்து மீண்டு வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
Recommended Video
இந்தியாவில் கொரோனா தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. முக்கியமாக மகாராஷ்டிரா, டெல்லி, மத்திய பிரதேசத்தில் கொரோனா வேகம் எடுத்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 14378 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மொத்தம் 480 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் மொத்தம் 11906 பேர் கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். 1991 பேர் குணமடைந்து உள்ளனர். ஆனால் இந்தியாவில் இரண்டு மாநிலங்களில் கொரோனா கட்டுக்குள் வர தொடங்கி உள்ளது.

இரண்டு மாநிலத்தின் நிலை
தமிழகமும் கேரளாவும் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனாவில் இருந்து மீண்டும் வருகிறது. கேரளாவில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது கேரளாவில் தினமும் ஒற்றை இலக்கத்திலேயே புதிய நோயாளிகள் மருத்துவமனையில் சேர்கிறார்கள். கடந்த ஒரு வாரமாக அங்கு 5,8, 2, 1 என்று ஒற்றை இலக்கத்திலேயே கேஸ்கள் பதிவாகி உள்ளது .கேரளாவில் கடந்த ஏப்ரல் 11 முதல் நேற்று வரை மொத்தம் 32 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கேரளா எப்படி
இந்த 8 நாட்களில் 129 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு உள்ளனர். அங்கு 500 பேர் வரை குறைந்தது பாதிக்கப்படுவார்கள் என்று கணிக்கப்பட்ட நிலையில் கேரளா கொரோனாவை கட்டுப்படுத்தி உள்ளது. கேரளாவில் 395 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 138 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 255 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அங்கு கொரோனா கிராப் வேகமாக சரிந்து இயல்பு நிலை திரும்புகிறது.

தற்போது நிலை என்ன
தற்போது கேரளாவில் கொரோனா ஏற்படும் நபர்கள் கூட அங்கு தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் கேரளாவில் மொத்தமாக பதிவான கேஸ்களில் 277 கேஸ்கள் வெளிநாட்டில் இருந்து வந்த ஸ்டேஜ் 1 வகை கேஸ்கள் ஆகும். இதனால் அங்கு ஸ்டேஜ் 2 பெரிய அளவில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கேரளாவில் 28 நாட்கள் மக்களை தனிமைப்படுத்த வேண்டும் என்ற உத்தரவு பெரிய பலன் அளித்துள்ளது.

தமிழ்நாடு நிலை
அதேபோல் சரியான திட்டமிடல் மற்றும் கட்டுப்பாடு அங்கு பெரிய பலன் அளித்துள்ளது. இன்னொரு பக்கம் தமிழ்நாடு வேகமாக கொரோனாவில் இருந்து மீண்டு வருகிறது. தமிழகத்தில் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் புதிய நோயாளிகளை விட டிஸ்சார்ஜ் செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகமுள்ளது. இதனால் 2 மாநிலங்களும் விரைவில் கொரோனாவில் இருந்து மீண்டு வர வாய்ப்புள்ளது.

வேகமாக மீள்கிறது
தமிழகத்தில் 1323 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 1025 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 283 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 103 பேர் தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இது கொரோனா முடிவதற்கான தொடக்கம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். கொரோனா பாதிக்கப்பட்ட பலர் தினமும் வேகமாக குணப்படுத்தப்படுகிறார்கள்.

நோயாளிகள் குணப்படுத்தப்படும் வேகம்
நோயாளிகள் குணப்படுத்தப்படும் வேகத்தில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் முன்னணியில் உள்ளது. தமிழகத்தில் புதிதாக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி உள்ளது. அதேபோல் சாரி எனப்படும் தீவிர சுவாச தொற்று இருக்கும் நபர்களுக்கு பெரிதாக கொரோனா பாதிப்பு இல்லை. இதனால் தமிழகத்தில் சமூக தொற்று இல்லை. தமிழகத்தில் மிக சிறப்பாக செய்யப்பட்ட காண்டாக்ட் டிரேசிங் முறைதான் இந்த வெற்றிக்கு காரணம்.

இந்த மாதம் சரியாகும்
தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா பாதித்த இடங்களை விட புதிதாக கிளஸ்டர் பரவல் எங்கும் உருவாகவில்லை. தமிழகத்தில் இதே நிலை நீடித்து, புதிதாக எங்கும் கிளஸ்டர் பரவல் ஏற்படவில்லை என்றால் இந்த மாத இறுதியில் தமிழகத்தில் கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம், கேரளா இரண்டு மொத்தமாக லாக் டவுன் முடியும் போது கொரோனாவில் இருந்து மீண்டு வர வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications