இதை மாத்தலாமே! வீக் எண்டில் இறைச்சி கடைகளில் அள்ளும் கூட்டம்! தமிழ்நாடு அரசு சொன்ன முக்கிய அறிவுரை
சென்னை: வார இறுதி நாட்களில் மாமிசம் வாங்குவதற்காக மக்கள் அதிக அளவில் கடைகளில் கூடும் நிலையில், தமிழ்நாடு அரசு இது தொடர்பான முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. பொது பயன்பாடுகள், அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மற்றபடி இரவு நேர ஊடங்கு அமலில் உள்ளது.
அதேபோல் வார இறுதி நாட்களில் வழிபாட்டு மையங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை முழு லாக்டவுன் போடப்பட்டு இருக்கிறது..

இறைச்சி கடைகள்
ஞாயிற்றுக்கிழமை முழு லாக்டவுன் உள்ளதால் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி சாப்பிட விரும்பும் பலர் சனிக்கிழமையே கடைகளில் அதிக அளவில் கூடி மாமிசம் வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது. சென்னையில் கடந்த வாரம் காசிமேட்டில் இதனால் மிகப்பெரிய கூட்டம் நிரம்பி வழிந்தது. நூற்றுக்கணக்கானோர் மொத்தமாக வந்து மீன் வாங்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியது.

பல மாவட்டங்கள்
சென்னையில் மட்டுமின்றி பல மாவட்டங்களில் மக்கள் இதேபோல் கூட்டம் கூட்டமாக இறைச்சி வாங்க லைனில் நின்ற சம்பவங்களும் நடந்தன. திருச்சி, மதுரை, கோவை போன்ற பெருநகரங்களில் சனிக்கிழமைகளில் இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. மக்கள் பலர் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி சாப்பிட்டு பழகிவிட்டனர். அன்று விடுமுறை தினம் என்பதால் இறைச்சி சாப்பிட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள். ஞாயிறில் இறைச்சி கடைகள் செயல்படாது என்பதால், சனி மாலையே வாங்கிச்சென்று, குளிர்சாதனை பெட்டிகளில் பத்திரப்படுத்துகின்றனர்.

கொரோனா அபாயம்
இதனால் பல இறைச்சி கடைகளில் சனிக்கிழமைகளில் கூட்டம் அதிகரித்து கொரோனா பரவும் அபாயம் ஏற்படுகிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு இறைச்சி வாங்குவது தொடர்பாக முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளது. தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ஆர். ராதாகிருஷ்ணன் வழங்கி உள்ள அறிவுரையில், தமிழ்நாட்டில் சனிக்கிழமைகளில் மக்கள் அதிக அளவில் இறைச்சி கடைகளில்.கூடுகிறார்கள் இது கொரோனா பரவும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. வார நாட்களில் இப்படி கூட்டம் இல்லை. வார இறுதி நாட்களில் மட்டுமே கூட்டம் அதிகமாக உள்ளது.

இறைச்சி கடைகள்
குறிப்பிட்ட நாளில் கட்டாயம் இறைச்சி சாப்பிட வேண்டும் என்று பலர் கடைகளில் கூடுகிறார்கள். மாறாக மக்கள் தங்கள் உடல்நலத்தில் அக்கறையோடு இருந்து தற்காத்து கொள்ள வேண்டும். காசிமேடு போன்ற இடங்களில் வார இறுதி நாட்கள் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். இறைச்சி மற்றும் மீன் கடைகள், மார்கெட்களில் மீண்டும், மீண்டும் கூட்டமாக கூடி தொற்று பரவலுக்கு காரணமாகி விடக் கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications