முற்றிய கொரோனாவிலும்.. 40 வயது நபருக்காக பெட்டை கொடுத்து.. தன்னுயிரைத் தியாகம் செய்த முதியவர்!
தொற்று நோயாளிக்காக தன் படுக்கையை விட்டுத்தந்த 85 வயது தாத்தா உயிரிழந்தார்
சென்னை: தனக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட போதிலும், சீரியஸ்தன்மை இருந்தபோதிலும், இன்னொரு இளைஞருக்கு உதவி உள்ளார் 85 வயது முதியவர்.. இறுதியில் அனைவரின் இதயத்திலும் நின்றுவிட்டார்!
இந்தியாவில் தொற்றின் 2வது அலை உருவெடுத்துள்ளது.. இது இளைஞர்களையும் சேர்ந்து தாக்கி வருகிறது.. இதனால் பாதிப்புகள் அதிகமாகி கொண்டிருக்கின்றன.. உயிரிழப்புகள் பெருகி வருகின்றன... ஆஸ்பத்திரிகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி தட்டுப்பாடுகள் உள்ளன.. மேலும் நோயாளிகளுக்கு படுக்கைகளும் இல்லை.
பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு போராடி வருகிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில், தொற்று பாதித்த ஒரு முதியவர் செய்த காரியம் அனைவரையும் பிரம்மித்து போக வைத்துள்ளது.

நாக்பூர்
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அந்த பெரியவர்.. 85 வயதாகிறது.. நாராயண் பவுராவ் தபட்கர் என்பது அவரது பெயர்.. ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்.. இவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. இதனால் குடும்பத்தினர் பதறிப்போய், ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்க வந்தனர்.. ஆனால், இவருக்கு படுக்கை இல்லை.. பிறகு நிறைய முயற்சிகளுக்கு பிறகு பெட் கிடைத்துள்ளது.

இளம்பெண்
இந்நிலையில், ஒரு இளம்பெண் தன்னுடைய 40 வயது கணவனை அழைத்து கொண்டு, அதே ஆஸ்பத்திரிக்கு வந்தார்.. கணவனுக்கு வைரஸ் தொற்று பாதித்துள்ளதால், கதறி அழுது கொண்டே, அவரை அட்மிட் செய்ய நிறைய முயற்சி மேற்கொண்டார்.. இங்கும் அங்கும் ஓடினார்.. டாக்டர்களை சந்தித்து அழுது அழுது கெஞ்சி கொண்டிருந்தார்.. ஆனாலும் கடைசி வரை அவர் கணவருக்கு படுக்கை கிடைக்கவில்லை.. இதையெல்லாம் அந்த பெரியவர் நாராயணன் கவனித்து கொண்டே இருந்தார்.. பிறகு தனக்கு சிகிச்சை தரும் டாக்டரிடம் சென்றார்.

கணவர்
"டாக்டர் சார்.. எனக்கு 85 வயசாயிடுச்சு. நிறைய பார்த்துட்டேன்.. வாழ்ந்தும் முடிச்சிட்டேன்.. அதனால என்னைவிட, வாழவேண்டிய அந்த பெண்ணின் கணவருக்குதான் படுக்கை தேவை.. அந்த இளைஞனுக்கு பின்னால் ஒரு முழு குடும்பமே இருக்கிறது.. அவர்களுக்கெல்லாம் இவர் அவசியம் தேவை.. நாளைக்கு அந்த குடும்பம் அனாதையாக போய்விடக்கூடாது.. அதனால் என் படுக்கையை விட்டுத்தருகிறேன்" என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பி சென்று விட்டார் பெரியவர் நாராயணன்.

தொற்று சிகிச்சை
பிறகு, தன்னுடைய வீட்டிலேயே தொடர்ந்து கொரோனா தொற்றுக்கான சிகிச்சையையும் எடுத்து கொண்டார்.. 3 நாள் சிகிச்சை எடுத்தார்.. ஆனால், 3வது நாளே நாராயணன் பரிதாபமாக இறந்துவிட்டார்.. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பலர் நாராயணனுக்கு அஞ்சலி தெரிவித்தும் அவரை பாராட்டியும் வருகின்றனர்.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications