யார் வந்தாலும் சரி.. "நெகடிவ்" சர்ட்டிபிகேட் கட்டாயம்.. இ-பதிவு வரபோகிறது.. கலெக்டர் திவ்யா அதிரடி
நீலகிரிக்கு வர இ-பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வருபவர்கள், கொரோனா டெஸ்ட் செய்து, தொற்று பாதிப்பு இல்லை என்ற நெகடிவ் சர்ட்டிபிகேட்டை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என்று கலெக்டர் திவ்யா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் சொன்னதாவது:
"கர்நாடகா, கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வர இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்தது... ஆனால், தற்போது லாக்டவுன் தளர்வு ஏற்படுத்தவும் இ-பாஸ் ரத்து செய்யப்பட்டுவிட்டது.. எனவே, இ-பதிவு நடைமுறையில் வர அனுமதிக்கப்பட்டு உள்ளது...

தொற்று
ஏனெனில், கேரளாவில் தொற்று பரவல் அதிகமாகி கொண்டிருக்கிறது.. ஊரடங்கில் தளர்வு காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு அதிகமானோர் வந்து செல்கிறார்கள்.. எனவே, தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வருபவர்கள், கொரோனா டெஸ்ட் செய்து, தொற்று பாதிப்பு இல்லை என்ற நெகடிவ் சர்ட்டிபிகேட் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.

சர்ட்டிபிகேட்
நீலகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள செக்போஸ்ட்களில் இ-பதிவு, கொரோனா நெகட்டிவ் சர்ட்டிபிகேட் போன்றவற்றை சரிபார்த்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்... அதேபோல, உள்ளூர் மக்கள் வெளிமாநிலங்களுக்கு சென்று திரும்பினாலும் அதுபோன்றே நெகடிவ் சர்ட்டிபிகேட் கட்டாயம் தேவை.

ஜிகா வைரஸ்
சில நாட்களாகவே, கேரளாவில் ஜிகா வைரஸ் பரவி வருகிறது... கேரளாவை ஒட்டி நீலகிரி இருப்பதால், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. இப்போதைக்கு ஊட்டி, குன்னூர் வட்டாரங்களில் ஏடிஎஸ் கொசுக்கள் இல்லை.. அதற்கான கண்காணிப்புகளும் தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

காய்ச்சல்
ஆனால், கூடலூர் பகுதியில் அந்த வகை கொசுக்கள் கண்டறியப்பட்டு, ஏற்கனவே டெங்கு காய்ச்சலும் பதிவாகி இருக்கிறது. கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களில் தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது... குறிப்பாக, கூடலூர் வட்டாரத்தில் அதிக கவனம் எடுத்து கொள்ளப்பட்டு வருகிறது.. தீவிரமாக கண்காணிக்கப்பட்டும் வருகிறது.. யாருக்கேனும் காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.. ஆம்புலன்ஸ் வசதி தயாராக இருக்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications