தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அதிகாலை 5 மணிக்கு நிறைவு- மீண்டும் போக்குவரத்து தொடங்கியது!
சென்னை: கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருவதால் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட இரவு நேர ஊரடங்கு அதிகாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகி உள்ளது. நாட்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் மிக அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு
தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை இரவு முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருந்தது.

போலீசார் தீவிர சோதனை
தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கை செயல்படுத்தும் வகையில் சாலைகள், மேம்பாலங்களில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன. சென்னையில் மட்டுமே சுமார் 10,000 போலீசார் இரவு நேர ஊரடங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அனைத்து மாவட்டங்களிலும் இரவு ஊரடங்கின் போது பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சாலைகளில் இரவு 10 மணிக்கு மேல் தேவை இல்லாமல் ஊர் சுற்றியவர்களுக்கு போலீசார் அபராதமும் விதித்தனர். பேருந்து நிலையங்களில் இருந்த கடைகளையும் மூடுவதற்கு போலீசார் உத்தரவிட்டனர். இரவுப் பணிக்கு சென்றவர்கள் உரிய அடையாள அட்டையுன் அனுமதிக்கப்பட்டனர். ரயில் நிலையம், விமான நிலையம் செல்லும் அல்லது அங்கிருந்து வீடு திரும்பும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

மீண்டும் போக்குவரத்து
இரவு நேர ஊரடங்கு அதிகாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து தேநீர் கடைகள் உள்ளிட்டவைகள் 5 மணிக்குப் பிறகு திறக்கப்பட்டன. அதேபோல் நீண்டதூரம் செல்லக் கூடிய வெளியூர் பேருந்து போக்குவரத்தும் அதிகாலை 5 மணிக்குப் பிறகு தொடங்கியது. தமிழகத்தில் 2-வது நாளாக இன்று இரவும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையன்று முழுமையான லாக்டவுன் அமல்படுத்தப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டால்லின் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் அபராதம்
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் ஷாப்பிங் மால், நகைக்கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவைகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் மற்றும் விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீ நாதா ஆகியோர்கள் நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமுலுக்கு வந்த அதை கடை உரிமையாளரிடம் சுட்டிக்காட்டினர் தொடர்ந்து இரவு நேரத்தில் ஊரடங்கும் மீறி செயல்படும் கடை மீது நடவடிக்கை எடுத்து சீல் வைக்கப்படும் என எச்சரித்தனர். இதனை மீறி இரவு 10 மணிக்கு மேல் செயல்பட்ட விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள உணவகம், சென்னை சாலையில் உள்ள உணவகம், நான்குமுனை சந்திப்பில் உள்ள உணவகம் ஆகிய மூன்று உணவகத்திற்கு ரூ. 4500 அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் மோகன் எச்சரிக்கை விடுத்தார். பழனி நகரம் முழுவதும் ஆள் நடமாட்டம் இன்றி முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் அங்கங்கே மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து இருந்ததால் அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் எச்சரித்து அனுப்பினர்
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications