உலகம் முழுக்க 5 லட்சத்தை தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை.. 22 ஆயிரம் பேர் பலி.. கொரோனா புள்ளி விவரம்!

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுக்க கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுக்க 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். உலகின் மிகப்பெரிய பேரிடராக இந்த வைரஸ் உருவெடுத்து இருக்கிறது.

Recommended Video

    கொரோனாவால் வரும் நாட்களில் என்ன நடக்கும்? அதிர்ச்சி ரிப்போர்ட்

    கடந்த வருடம் டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் கொரோனா வைரஸ் சீனாவில் தாக்கியது. சீனாவின் வுஹன் நகரத்தில் கொரோனா வைரஸ் முதல் நபரை தாக்கியது. அப்போது தொடங்கிய சிக்கல் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    கொரோனா உலகம் முழுக்க மொத்தம் 150க்கும் அதிகமான நாடுகளில் பரவி உள்ளது. கொரோனாவை உலக பெருந்தொற்றுநோய் என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

    உலகம் முழுக்க எத்தனை பேர்

    உலகம் முழுக்க எத்தனை பேர்

    உலகம் முழுக்க கொரோனா வைரஸால் 503,203 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் 22304 பேர் பலியாகி உள்ளனர். 121,227 இதுவரை கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இன்று இரவு கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை தொடும் என்று கூறுகிறார்கள். கொரோனாவால் சீனாவை விட இத்தாலி மற்றும் ஸ்பெயின்தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகள்

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகள்

    சீனா: 81,285 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3,287 பேர் பலியாகி உள்ளனர்.

    இத்தாலி: 74,386 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 7503 பேர் பலியாகி உள்ளனர்.

    ஸ்பெயின்: 56,188 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 4089 பேர் பலியாகி உள்ளனர்.

    அமெரிக்கா : 75,066 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1036 பேர் பலியாகி உள்ளனர்.

    ஜெர்மனி: 39,502 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 222 பேர் பலியாகி உள்ளனர்.

    வேகமாக வளரும் நாடுகள்

    வேகமாக வளரும் நாடுகள்

    ஈரான்: 29,406 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2234 பேர் பலியாகி உள்ளனர்.

    பிரான்ஸ்: 25,233 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1131 பேர் பலியாகி உள்ளனர்.

    சுவிஸ்: 11,125 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 165 பேர் பலியாகி உள்ளனர்.

    யுனைட்டட் கிங்டம்: 9,529 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 465 பேர் பலியாகி உள்ளனர்.

    இந்தியா நிலை

    இந்தியா நிலை

    இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 694 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 42 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். 558 பேர் மருத்துவமனையில் இருக்கிறார்கள். மொத்தம் 18 பேர் கொரோனவால் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கேரளாவில் அதிகமாக 139 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 126 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+