சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

7 மாநிலங்கள்.. 5 நகரங்கள்.. தொடர்ந்து உயரும் கொரோனா கிராஃப்.. பயன் அளிக்காத 3 லாக்டவுன்கள்!

இந்தியாவில் மூன்று லாக் டவுன் அறிவித்த பின்பும் கூட கொரோனா கேஸ்களில் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் மூன்று முறை லாக் டவுன் அறிவித்த பின்பும் கூட கொரோனா கேஸ்களில் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

Recommended Video

    தமிழகத்தை குழப்பும் கொரோனா பேட்டர்ன்... என்ன காரணம்?

    கடந்த மார்ச் மாதம் 24ம் தேதியில் இந்தியாவில் முதல் லாக் டவுன் அறிவிக்கப்பட்டது. 21 நாட்கள் லாக் டவுன் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் கொரோனா கேஸ்கள் குறையும் என்று கருத்தப்பட்ட நிலையில் மீண்டும் லாக் டவுன் நீட்டிக்கப்பட்டது. மே 3ம் தேதி வரை இரண்டாம் கட்டமாக லாக் டவுன் நீட்டிக்கப்பட்டது.

    ஆனால் அதன்பின்பும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையாத காரணத்தால் மேலும் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 17ம் தேதி வரை லாக் டவுன் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

    லாக்டவுன் காலத்து பட்டினிச் சாவுகள் குறித்து எந்த ஒரு கணக்குமே இல்லையே... ப. சிதம்பரம் லாக்டவுன் காலத்து பட்டினிச் சாவுகள் குறித்து எந்த ஒரு கணக்குமே இல்லையே... ப. சிதம்பரம்

    மூன்று முறை செய்த நாடு

    மூன்று முறை செய்த நாடு

    உலகத்தில் மூன்று முறை லாக்டவுனை நீட்டித்த வெகு சில நாடுகளில் இந்தியாவும் ஒரு நாடு என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மூன்று முறை இந்தியாவில் லாக் டவுனை நீட்டித்தும் கூட இந்தியாவில் கொரோனா கேஸ்கள் குறைவதற்கு பதிலாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்தியாவில் தினமும் பதிவாகும் கேஸ்களின் எண்ணிக்கையும், பலியாகும் நபர்களின் எண்ணிக்கையும் எப்போதும் போல எந்த மாற்றமும் இன்றி அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    இரட்டிப்பு ஆகிறது

    இரட்டிப்பு ஆகிறது

    இந்தியாவில் கொரோனா கேஸ்கள் இரட்டிப்பு ஆகும் வேகம் குறைவது போல தெரிந்தது. ஆனால் மீண்டும் அதன் வேகம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று மட்டும் இந்தியா முழுக்க 2500 கேஸ்கள் பதிவானது. இந்தியாவில் ஒரே நாளில் இத்தனை கேஸ்கள் பதிவானது இதுதான் முதல்முறை. மொத்தம் 93 பேர் நேற்று பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை தற்போது 40,019 ஆக உள்ளது . பலி எண்ணிக்கை 1325 ஆக உள்ளது.

    7 முக்கியமான மாநிலம்

    7 முக்கியமான மாநிலம்

    முக்கியமாக இந்தியாவில் இருக்கும் முக்கியமான 7 மாநிலங்களில் பெரிய ஐந்து நகரங்கள்தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குஜராத்தும், மஹாராஷ்டிராவும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரண்டு மாநிலங்களிலும் ஒரே நாளில் அதிக கொரோனா மரணங்கள் பதிவானது. மகாராஷ்டிராவில் நேற்று 37 பேர் பலியானார்கள், குஜராத்தில் 26 பேர் பலியானார்கள். மகாராஷ்டிரிவில் 12296 கேஸ்கள் பதிவாகி உள்ளது.

    மும்பை எப்படி

    மும்பை எப்படி

    அங்கு 521 பேர் பலியாகி உள்ளது. மும்பையில் 8359 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 322 பேர் மும்பையில் பலியாகி உள்ளனர். புனேவில் 1339 கேஸ்கள் பதிவாகி உள்ளது. அங்கு 102 பேர் பலியாகி உள்ளனர். தானேவில் 1086 கேஸ்கள் பதிவாகி உள்ளது . 18 பேர் பலியாகி உள்ளனர். இன்னொரு பக்கம் குஜராத்தில் 5054 கேஸ்கள் பதிவாகி உள்ளது. அங்கு 262 பேர் பலியாகி உள்ளனர். அகமதாபாத்தில் மட்டும் 3543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 185 பேர் பலியாகி உள்ளனர்.

    டெல்லி கேஸ்கள்

    டெல்லி கேஸ்கள்

    நேற்று டெல்லி கொரோன கேஸ்களில் எண்ணிக்கையில் 4 ஆயிரத்தை தாண்டியது. இத்தனை நாட்கள் டெல்லியில் கொஞ்சம் வேகம் குறைந்த நிலையில் திடீர் என்று ஒரே நாளில் டெல்லியில் 384 கேஸ்கள் வந்தது. டெல்லியில் மொத்தம் 64 பேர் பலியாகி உள்ளனர். அங்கு 4122 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ராஜஸ்தானில் மொத்தம் 2832 பேருக்கு கொரோனா உள்ளது. அங்கு பலி எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. அங்கு 270 பேர் அதிகமாக பலியாகி உள்ளனர்.

    மத்திய பிரதேசம் என்ன?

    மத்திய பிரதேசம் என்ன?

    மத்திய பிரதேசத்தில் 2757 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 151 பேர் பலியாகி உள்ளனர். இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் கொரோனா மிக தீவிரமாக வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் வேகம் குறைவது போல இருந்து தற்போது வேகம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தில் 231 கேஸ்கள் வந்துள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 2757 பேருக்கு கொரோனா கேஸ்கள் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 29 பேர் பலியாகி உள்ளனர்.

    தமிழகம் நிலை

    தமிழகம் நிலை

    மஹாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசத்திற்கு அடுத்து ஆறாவது இடத்தில் இருக்கிறது. உத்தர பிரதேசத்தில் மொத்தம் 2487 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 43 பேர்தான் பலியாகி உள்ளனர். ஆனால் கொரோனா டெஸ்டிங்கில் தினமும் 10 ஆயிரம் + டெஸ்டிங் ஒரே மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. மகாராஷ்டிராவில் தினமும் 9000+ டெஸ்டிங் செய்யப்படுகிறது.

    நேற்று எத்தனை

    நேற்று எத்தனை

    நேற்று மட்டும் மகாராஷ்டிராவில் 790 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் 333 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. டெல்லியில் 384 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தல் 73 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 231 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானில் 106 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் 206 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

    மோசமாக பாதிக்கப்பட்ட நகரங்கள்

    மோசமாக பாதிக்கப்பட்ட நகரங்கள்

    இந்தியாவில் மோசமாக பாதிக்கப்பட்ட நகரங்கள் என்றால் மும்பையில் 8359 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 322 பேர் மும்பையில் பலியாகி உள்ளனர். புனேவில் 1339 கேஸ்கள் பதிவாகி உள்ளது. அகமதாபாத்தில் மட்டும் 3543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 185 பேர் பலியாகி உள்ளனர். மத்திய பிரதேசத்தில் இந்தூரில் 1545 பேருக்கு கொரோனா உள்ளது. 74 பேர் இந்தூரில் பலியாகி உள்ளனர். சென்னையில் 1260 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 பேர் பலியாகி உள்ளனர்.

    இந்தியாவில் பயன் இல்லை

    இந்தியாவில் பயன் இல்லை

    மொத்தத்தில் இந்தியாவில் மூன்று லாக் டவுன் அறிவித்த பின்பும் கூட கொரோனா கேஸ்களில் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் இந்தியா லாக் டவுன் மட்டுமின்றி வேறு ஏதாவது ஒரு பிளானையும் உடனே தீட்ட வேண்டும். லாக் டவுன் மட்டும் கொரோனாவிற்கு தீர்வாகாது. மத்திய அரசு உடனடியாக ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    English summary
    Coronavirus: Number of cases increases all over India even after 3 lockdowns so far.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X