இப்போ சந்தோஷமா? ஆஸ்திரேலியா டூரை கேன்சல் செய்த விஜய்! மே 4ஆம் தேதி போட்டிருக்கும் மெகா ப்ளான்! என்ன?
சென்னை: தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளான மே 4ஆம் தேதி, நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாக வெளியான தகவல் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் ஓய்வெடுப்பதற்காக ஆஸ்திரேலியா செல்ல இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக விஜயின் அந்த பயணம், மே மூன்றாவது வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது
2026 சட்டசபைத் தேர்தலை ஒட்டி தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 23ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற்றது. தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

பல்வேறு மாவட்டங்களில் பொதுக்கூட்டங்கள், வீதி வீதியாக பிரசாரம், ஆதரவாளர்களை சந்தித்தல் உள்ளிட்ட பணிகளில் தலைவர்கள் தொடர்ந்து ஈடுபட்டதால், தேர்தல் முடிந்த பிறகு அவர்கள் ஓய்வு எடுக்க வெளிநாடு அல்லது சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வழக்கம் உள்ளது.
தவெக விஜய்
அந்த வகையில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யும் தேர்தல் பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியானது. குறிப்பாக, தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 4ஆம் தேதியே அவர் ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டதால் அரசியல் வட்டாரங்களில் இது குறித்து அதிகமாக பேசப்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளியாகும் முக்கிய நாளில் அவர் வெளிநாடு செல்லவிருக்கிறார் என்ற தகவல் வெளியானதும், அதற்கான காரணங்கள் குறித்து பல்வேறு தரப்பினரும் விவாதிக்க தொடங்கினர்.
ஆஸ்திரேலியா பயணம்
விஜய் பொதுவாக தனது திரைப்படப் பணிகள் முடிந்த பிறகு ஓய்வெடுக்க வெளிநாடு செல்லும் பழக்கத்தை வைத்திருந்ததாக அவரது தரப்பினர் கூறுகின்றனர். அதேபோல் தேர்தல் பணிகளும் நிறைவடைந்துள்ளதால் சிறிது ஓய்வு எடுக்கவே இந்த பயணம் திட்டமிடப்பட்டதாக கூறப்பட்டது. இதற்காக முன்பதிவு செய்யப்பட்ட விமானச் சீட்டுகள் தொடர்பான தகவல்களும் சமூக வலைதளங்களில் பரவியதால் இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்காலிகமாக ரத்து
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, விஜய்யின் வெளிநாட்டு பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் கட்சித் தலைமையகத்தில் இருந்து நிலைமையை கண்காணிக்க வேண்டிய அவசியம் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. மேலும், தேர்தலில் தங்களுக்கு சாதகமான முடிவுகள் வரும் என்ற நம்பிக்கை கட்சி நிர்வாகிகளிடையே இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பனையூர் அலுவலகம்
அதனால் முடிவுகள் வெளியாகும் நாளில் விஜய் பனையூர் தவெக அலுவலகத்தில் நேரடியாக இருந்து ஆதரவாளர்களை சந்திக்கவும், அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் முடிவுகள்
தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் விஜய் வெளிநாடு செல்லவிருக்கிறார் என்ற தகவல் முதலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த பயணம் ரத்து செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. மேலும், விஜயின் இந்த பயணம் தேர்தல் நடைமுறைகள் முடிந்து மே 3வது வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் தவெக ஆதரவாளர்கள்.
-
விஜய்யின் பெயரை கூட தவறாக சொன்ன கர்நாடகா அமைச்சர்.. இப்படி செய்வாருனு யாரும் எதிர்பார்க்கலை -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
எம்ஜிஆர், ஜெயலலிதா போலவே விஜய்யும்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் என்ன ஸ்பெஷல்? -
கம்ப்ளைன்ட் கொடுக்க போன என் மீதே கேஸ் போட்டுட்டாங்க.. பிளான் பண்ணி பண்ணுறாங்க! ஜூலி ஆதங்கம் -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
1.5 டிரில்லியன் டாலர் இலக்கு.. ஸ்டாலின் வைத்த டார்கெட்டை உயர்த்திய விஜய்.. மோடியிடம் சொன்னது என்ன? -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
பிரசாதங்களை கோவில்களிலேயே தயாரிக்க வேண்டும்.. 3 மாதம் கெடு.. அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
101 தவெக எம்எல்ஏக்களுக்கு ரூல்ஸ் சொல்லி கொடுக்கணும்..முதல் முறை வென்ற 145 பேருக்கு 2 நாள் பயிற்சி -
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்!












Click it and Unblock the Notifications