சிறகடிக்க ஆசை: ஜெயிலுக்கு போன மனோஜ்.. காப்பாற்ற மீனா எடுத்த முடிவு.. சிக்கலில் விஜயா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial Promo) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஏப்ரல் 27ஆம் தேதி முதல் மே இரண்டாம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் பைனான்சியர் கொடுத்த கம்ப்ளைன்ட் காரணமாக மனோஜ் ஜெயிலுக்கு போகிறார். அதே நேரத்தில் அவரைக் காப்பாற்றுவதற்காக மீனா அதிரடியான முடிவுகளை எடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ
சிறகடிக்க ஆசை சீரியலில் ஒவ்வொரு முறையும் மனோஜும் விஜயாவும் ஏதாவது பிரச்சனை பண்ணிக் கொண்டே இருக்க, அவர்களை முத்துவும் மீனாவும் தான் காப்பாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும் மனோஜ் கொஞ்சம் கூட நன்றியே இல்லாமல் முத்துவை ஜெயிலுக்கு போனவன் என்று வசைப்பாடுவார்... விஜயா மட்டும் லேசு பட்டவங்க கிடையாது, தன்னுடைய மகன் தனக்கு எவ்வளவு உதவி செஞ்சாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் எதற்கெடுத்தாலும் முத்து தான் முரடன், அவன் ஜெயிலுக்கு போனவன் என்று பேசிக்கொண்டு இருப்பார்.

உண்மை உடைந்தது
ஆனால் இப்போ அதிரடியான ஒரு புது சம்பவமே நடந்திருக்கிறது. அதாவது அண்ணாமலை கையெழுத்தை போட்டு வீட்டு பத்திரத்தை பைனான்சியரிடம் கொடுத்து விஜயாவும் மனோஜும் பணம் வாங்கி இருந்தனர். இந்த உண்மைகளை பைனான்ஸியரும் சிந்தாமணியும் வீட்டில் வந்து சொல்லி இருக்கின்றனர். அதோடு இந்த வீட்டை நாங்கள் ஏலத்தில் விடப்போறோம் என்று மிரட்டி இருந்தனர்.

பணத்தை கொடுத்த முத்து
உடனே முத்து நான் ஒரு மாதத்திற்குள் எல்லா பணத்தையும் தந்து வீட்டு பத்திரத்தை வாங்கிக்கிறேன் என்று சொல்லி இருந்தார். இந்த நிலையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோவில் மொத்தம் 40 லட்சம் பைனான்சியரிடம் கொடுக்க வேண்டியது இருக்கும் நிலையில் அதில் பத்து லட்சத்தை கொண்டு முத்து கொடுத்து விடுகிறார்.

சிந்தாமணியின் பிளான்
இதை பார்த்து கடுப்பான சிந்தாமணி நீ பணத்தை தந்து வீட்டு பத்திரத்தை வாங்கிட்டு போய் நிம்மதியா இருக்கலாம்னு பார்க்கிறியா? அதற்கு நான் விடமாட்டேன் என்று மனோஜ் மீது பைனான்சியரை வைத்து போலீசில் கம்ப்ளைன்ட் செய்ய வைத்திருக்கிறார். மனோஜ் அவருடைய அப்பாவின் கையெழுத்தை போட்டு ஏமாற்றியதாக பைனான்சியர் கம்ப்ளைன்ட் கொடுத்ததும் மனோஜை போலீஸ் அரெஸ்ட் செய்து இருக்கின்றனர்.
அதிரடி காட்டிய மீனா
இதுவரைக்கும் மனோஜ்க்காக மட்டுமே யோசிக்கும் விஜயா இந்த முறையும் மனோஜ் ஜெயிலில் இருக்கிறார் என்றதும் போலீஸ் ஸ்டேஷனில் போய் அவருக்காக அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் மீனா சிந்தாமணியின் வீட்டிற்கு சென்று மனோஜ் மீது கொடுத்த கம்ப்ளைன்ட்டை வாபஸ் வாங்கி அவரை வெளியே அனுப்பவில்லை என்றால் உனக்கு எதிரா சங்கத்தில் இருக்கிறவர்கள் எல்லாரும் கொடுத்த கம்ப்ளைன்ட் வைத்து உன்னை உள்ளே தள்ளிடுவேன் என்று மிரட்டுகிறார்.

இனி என்ன நடக்கும்?
இனி சிந்தாமணி பயந்து மனோஜை வெளியே அனுப்ப போகிறாரா? அல்லது என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று மனோஜ் கூடுதல் பிரஷர் கொடுக்கப் போகிறாரா? என்பது அடுத்த வாரம் தான் தெரியும். மனோஜ் மீனாவையும் முத்துவையும் எவ்வளவோ அசிங்கப்படுத்தி இருக்கிறார். ஆனாலும் குடும்பத்திற்காக மீனா இப்போ அதிரடியாக மாறி இருக்கிறார். இனியாவது விஜயாவும் மனோஜும் மீனாவை புரிந்து கொள்ளப் போகிறார்களா? அல்லது வழக்கம்போல ஜெயிலை விட்டு வெளியே வந்ததும் மீனா மீது பழி போடப்பட்டு திட்ட போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications