தமிழகத்தில் கொரோனா பாதித்த 2-வது நபர் உடல்நிலையில் முன்னேற்றம் - விரைவில் வீடு திரும்புகிறார்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மேலும் ஒருவர் குணமடைந்தார்.
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மேலும் ஒருவர் குணமடைந்தார். டெல்லியில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா நெகட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டது.
Recommended Video
நாடு முழுக்க கொரோன பரவி வரும் நிலையில் தற்போது தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 23 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
இதில் ஒருவர் ஏற்கனவே குணப்டுத்தப்பட்டுவிட்டார். இவர் காஞ்சிபுரத்தை சேர்ந்த இளைஞர். இவருக்குத்தான் முதலில் கொரோனா ஏற்பட்டது. தற்போது இவர் பூரண நலத்துடன் உள்ளார்.

இன்று ஒருவர் பலியானார்
இந்த நிலையில் இன்று கொரோனா காரணமாக ஒருவர் மதுரையில் பலியானார். இவர் இதற்கு முன் வெளிநாடு சென்றது இல்லை. அதேபோல் அண்டை மாநிலங்கள் எதற்கும் செல்லவில்லை. இவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தாய்லாந்தில் இருந்து ஈரோடு வந்த நபருக்கு கொரோனா ஏற்பட்டது. அந்த பயணியை இந்த மதுரை நபர் சந்தித்து இருக்கலாம் என்று கருதப்படுதுகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மேலும் ஒருவர் குணமடைந்தார். டெல்லியில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா நெகட்டிவ் உறுதி செய்யப்பட்டது. இவரின் உடல்நிலை நன்றாக தேறி வருகிறது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இவர் சிகிச்சை பெற்று வருகிறார். இன்னும் 2 நாட்களில் இவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார், என்று கூறப்பட்டுள்ளது.

எப்படி வந்தார்
டெல்லியில் இருந்து சென்னை வந்த இவர் உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் பகுதியை சேர்ந்தவர். உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர் பணி நிமித்தமாக சென்னை வந்துள்ளார். நேரடியாக ரயில் இல்லாத காரணத்தால் உத்தர பிரதேசத்தில் இருந்து பேருந்தில் டெல்லி சென்றுள்ளார். பின் அங்கிருந்து ரயிலில் சென்னை வந்துள்ளார். கடந்த ஒரு வாரம் முன் சென்னை வந்தவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.

மொத்தமாக குணம் அடைந்தார்
சென்னையில் இவர் பணி நிமித்தம் மற்றும் உறவினர்கள் சிலரை பார்க்க வந்துள்ளார். சென்னையில் இவர் கடந்த ஒரு வாரமாக தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை தொடர்பு கொண்ட 180 பேர் வரை தற்போது வீட்டில் தனிமையில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இவருக்கு கடைசியாக செய்த கொரோனா டெஸ்ட் நெகட்டிவ் என்று வந்துள்ளது. இவருக்கு கொரோனா குணப்படுத்தப்பட்டதன் மூலம் தமிழகத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 20 ஆக குறைந்துள்ளது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications