வேலையை காட்ட தொடங்கிவிட்டது.. பேனிக் பையிங் செய்ததால் வந்த வினை.. சென்னையை மிரட்டும் கொரோனா!
சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன் மக்கள் கூட்டம் கூட்டமாக பேனிக் பையிங் செய்ததன் காரணமாக தற்போது கொரோனா கேஸ்கள் வேகமாக அதிகரிக்க தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன் மக்கள் கூட்டம் கூட்டமாக பேனிக் பையிங் செய்ததன் காரணமாக தற்போது கொரோனா கேஸ்கள் வேகமாக அதிகரிக்க தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மிக மோசமான மாவட்டமாக சென்னை மாறியுள்ளது. சென்னையில் 176 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 1082 பேருக்கு இதுவரை கொரோனா ஏற்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த நான்கு நாட்களாக வரிசையாக கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. சென்னையில் 3 நாள் முன் 103 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இரண்டு நாள் முன் 94 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. முதல் நாள் 138 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. சென்னையில் 176 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

என்ன காரணம்
சென்னையில் இப்படி கொரோனா கேஸ்கள் அதிகரிக்க முக்கியமான காரணம் பேனிக் பையிங்தான் என்று கூறுகிறார்கள். சென்னையில் கடந்த வாரம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சென்னையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி சென்னையில் கடந்த 26ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படுமென அறிவிக்கப்பட்டது.

எப்போது வந்தது அறிவிப்பு
இந்த அறிவிப்பு 24ம் தேதி மாலைதான் வந்தது. அதுவும் 24ம் தேதி மாலை கடைகள் எல்லாம் மூடப்பட்ட பின்தான் இந்த அறிவிப்பு வெளியானது. அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடை எதுவும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டது. இதனால் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை ஒரே நாளில் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் கடந்த 25ம் தேதி மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியே வந்து பொருட்களை வாங்கினார்கள்.

அச்சம் அடைந்த மக்கள்
பொருட்கள் எல்லாம் தீர்ந்துவிடும், மூன்று நாட்களுக்கு பொருட்கள் கிடைக்காது என்ற அச்சம் காரணமாக மக்கள் இப்படி பொருட்கள் வாங்கியதால் பெரிய குழப்பம் ஏற்பட்டது. ஊரடங்கின் போது மக்கள் இப்படி கூட்டம் கூட்டமாக கூடியதும், பேனிக் பையிங் செய்ததும் தற்போது சென்னைக்கு பிரச்சனையாக முடிந்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக கேஸ்கள் அதிகரிக்க இதுவும் காரணம் என்று கூறுகிறார்கள்.

அதிக நாட்கள் ஆகும்
அதன்படி பொதுவாக கொரோனா வைரஸ் அறிகுறி ஏற்பட 14-21 நாட்கள் ஆகும். ஆனால் இப்போதெல்லாம் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லாமலே பரவுகிறது. அதேபோல் இதன் கருவுறும் காலம் 5-7 நாட்கள்தான் இருக்கிறது. அதாவது இந்த கொரோனா வைரஸ் ஒருவரை தாக்கினால் 5-7 நாட்களில் அவர்களுக்கு பாதிப்பு தெரிய தொடங்கி விடும். உடலில் வைரஸ் வேலையை காட்ட தொடங்கிவிடும். இப்போது சென்னையில் அப்படித்தான் பாதிப்பு தெரிய தொடங்கி உள்ளது.

பேனிக் பையிங் காரணம்
அதன்படி கடந்த வாரம் வெளியே சென்று பேனிக் பையிங் செய்த நபர்களுக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட தொடங்கி உள்ளது. சரியாக ஒரு வாரம் கழித்து பேனிக் பையிங் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி உள்ளது. பல்வேறு இடங்களில் தனி மனித இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் மொத்தமாக கூட்டம் கூட்டமாக வெளியே வந்ததன் மூலம் கொரோனா பாதிப்பை சந்திக்க தொடங்கி உள்ளனர்.

சென்னை கொரோனா
நேற்று சென்னையில் வந்த கொரோனா கேஸ்களுக்கு இதுதான் காரணம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். நேற்று சென்னையில் வந்த கொரோனா கேஸ்களில் 88 பேருக்கு எப்படி கொரோனா வந்தது என்று தெரியவில்லை. அதனால் இவர்கள் எல்லாம் அத்தியாவசிய பொருட்கள் வாங்க போது கொரோனா தாக்கப்பட்டு இருக்கலாம். அல்லது பேனிக் பையிங் செய்ய வெளியே சென்றவர்களை தொடர்பு கொண்டதன் மூலம் கொரோனா பரவி இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

இன்னொரு வாதம்
இதை நிரூபிக்க இன்னொரு வாதமும் வைக்கப்படுகிறது. பேனிக் பையிங் நடந்த 25ம் தேதி கோயம்பேடு மார்க்கெட்டில் பலர் கூட்டம் கூட்டமாக கூடினார்கள். தற்போது அதன் விளைவை நாம் கண் கூடாக பார்க்க தொடங்கி உள்ளோம். சென்னையில் கோயம்பேடு மார்க்கெட்டில் மட்டும் 60 பேருக்கு கொரோனா உள்ளது. அங்கு சென்ற பலருக்கு கொரோனா பரவி இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

மூன்று பகுதிகளில் கேஸ்கள்
பேனிக் பையிங் செய்வதற்காக கூட்டம் கூட்டமாக மக்கள் திருவிக நகர், ராயபுரம், தேனாம்பேட்டையில்தான் அதிக பேர் வெளியே வந்தனர். இந்த மூன்று மண்டலங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். இங்குதான் தற்போது கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. திருவிக நகரில் மொத்தம் 259 பேருக்கு கொரோனா உள்ளது. ராயபுரத்தில் மொத்தம் 216 பேருக்கு கொரோனா உள்ளது. தேனாம்பேட்டையில் 132 பேருக்கு கொரோனா உள்ளது.

மேலும் அதிகரிக்கும்
இதனால்தான் தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் எல்லாம் கொரோனா பாதிப்பு குறையும் நிலையில் சென்னையில் அதிகரிக்க தொடங்கி உள்ளது. சென்னையில் இப்படி பேனிக் பையிங் செய்தவர்கள் இன்னும் பலர் இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் கொரோனா இருக்கிறதா இல்லையா என்பது இப்போது தெரியாது. இதன் முடிவுகள் போக போகதான் தெரியும் என்று கூறுகிறார்கள். இதனால் சென்னையில் கேஸ்கள் மேலும் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.












Click it and Unblock the Notifications