சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

20 நாளில் குறைய வேண்டியது.. மாறாக அதிகரிக்கிறது.. தமிழகத்தை குழப்பும் கொரோனா பேட்டர்ன்.. அதிர்ச்சி!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் என்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    தமிழகத்தை குழப்பும் கொரோனா பேட்டர்ன்... என்ன காரணம்?

    தமிழகத்தில் கொரோனா பரவும் வேகம் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா வேகம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் நேற்று புதிதாக 231 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக தமிழகத்தில் 2757 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    நேற்று தமிழகத்தில் அதிகளவாக சென்னையில் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அரியலூரில் 18, காஞ்சிபுரத்தில் 13, திருவள்ளூரில் 7, செங்கல்பட்டில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

    ஸ்டெனோவுக்கு கொரோனா- டெல்லி சி.ஆர்.பி. எப் தலைமையகம் மூடல்ஸ்டெனோவுக்கு கொரோனா- டெல்லி சி.ஆர்.பி. எப் தலைமையகம் மூடல்

    கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது

    கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது

    கடந்த வாரத்திற்கு முதல் வாரம் தினமும் தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் குறைந்து வந்தது. தினமும் 50 -60 கேஸ்கள் மட்டுமே தமிழகத்தில் வந்த வண்ணம் இருந்தது. ஆனால் தினமும் தமிழகத்தில் டிஸ்சார்ஜ் ஆகும் நபர்களின் எண்ணிக்கை 100 என்ற நிலையில் இருந்தது. இதனால் தமிழகத்தில் வேகமாக ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை குறைந்தது. ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 900 என்று வந்தது.

    என்ன எதிர்பார்ப்பு

    என்ன எதிர்பார்ப்பு

    இதனால் புள்ளி விவரத்தின் அடிப்படையில் தினமும் குறையும் கேஸ்களால் தமிழகம் கொரோனாவில் இருந்து விரைவில் மீளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மூன்று வாரத்தில் தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் குறையும். மொத்தமாக 20 நாளில் தமிழகத்தில் அனைத்து கொரோனா கேஸ்களும் கட்டுப்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது. தமிழகத்தின் கிராப் சரிகிறது என்றும் சந்தோசமான செய்தி வெளியானது.

    மீண்டும் அதிகரிக்கிறது

    மீண்டும் அதிகரிக்கிறது

    ஆனால் தமிழகத்தில் கடந்த ஐந்து நாட்களாக மீண்டும் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தினமும் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஏப்ரல் 27ம் தேதி வரை தினமும் 50-60 என்று எண்ணிக்கையில் கொரோனா கேஸ்கள் வந்தது. ஆனால் அதன்பின் ஏப்ரல் 28ம் தேதி 121 கேஸ்கள், ஏப்ரல் 29ம் தேதி 104 கேஸ்கள், ஏப்ரல் 30ம் தேதி 161 கேஸ்கள், மே 1ம் தேதி 203 கேஸ்கள், மே 2ம் தேதி 231 கேஸ்கள் என்று வேகமாக எப்போதும் இல்லாத அளவிற்கு கொரோனா வேகம் எடுக்க தொடங்கியது.

    சென்னையில் மட்டும் வந்தது

    சென்னையில் மட்டும் வந்தது

    அதேபோல் சென்னையிலும் கொரோனா கேஸ்களில் வேகம் அதிகரிக்க தொடங்கியது. சென்னையில் கடந்த நான்கு நாட்களாக வரிசையாக கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. சென்னையில் ஏப்ரல் 28ம் தேதி 103 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. ஏப்ரல் 29ம் தேதி 94 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. ஏப்ரல் 30ம் தேதி மிக அதிகமாக 138 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. சென்னையில் 176 பேருக்கு மே 1ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மற்ற மாவட்டங்களும் பாதிக்கிறது

    மற்ற மாவட்டங்களும் பாதிக்கிறது

    நேற்று தமிழகத்தில் அதிகளவாக சென்னையில் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தமிழகத்தில் கொரோனா கிராப் மீண்டும் உயர தொடங்கி உள்ளது. சரி சென்னையில் மட்டும்தான் கொரோனா ஏற்படுகிறது என்று கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தால், தமிழகத்தின் மற்ற பகுதியிலும் கொரோனா ஏற்பட தொடங்கி உள்ளது. அரியலூர், செங்கல்பட்டு, கோவை, கடலூர், காஞ்சிபுரம், மதுரை மீண்டும் பாதிக்கப்படுகிறது.

    குணப்படுத்தும் வேகம் என்ன

    குணப்படுத்தும் வேகம் என்ன

    இன்னொரு பக்கம் புதுக்கோட்டை, பெரம்பலூர், திருவள்ளூர், விழுப்புரத்தில் கொரோனா மீண்டும் வர தொடங்கி உள்ளது. அதேபோல் தமிழகத்தில் கொரோனாவை குணப்படுத்தும் நபர்களின் எண்ணிக்கையும் மொத்தமாக சரிந்துள்ளது. தினமும் 100 என்ற எண்ணிக்கையில் நோயாளிகள் குணப்படுத்தப்பட்டு வந்தனர். ஆனால் தற்போது திடீர் என்று இந்த எண்ணிக்கை 60க்கும் கீழே குறைந்துள்ளது.

    எப்படி வருகிறது என்றே தெரியவில்லை

    எப்படி வருகிறது என்றே தெரியவில்லை

    தமிழகத்தில் இப்படி கொரோனா ஏற்படும் நபர்கள் பலருக்கு எப்படி கொரோனா ஏற்படுகிறது என்றே தெரியவில்லை. இரண்டு நாள் முன்பு 35 பேருக்கு எப்படி கொரோனா ஏற்பட்டது என்று தெரியவில்லை. நேற்று மட்டும் 88 பேருக்கு எப்படி கொரோனா ஏற்பட்டது என்று தெரியவில்லை. நேற்று மட்டும் 85 பேருக்கு தமிழகத்தில் எப்படி கொரோனா வந்தது என்று தெரியவில்லை. இவர்களின் காண்டாக்ட் ஹிஸ்டரியை கண்டுபிடிக்க முடியவில்லை.

    சமூக பரவல் வந்துவிட்டது

    சமூக பரவல் வந்துவிட்டது

    இதுவும் தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் தமிழகத்தில் வேகமாக அதிகரிக்க காரணம் ஆகும். இதனால் தமிழகத்தில் ஸ்டேஜ் 3 பரவல் வந்துவிட்டதா என்று கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் கண்டிப்பாக ஸ்டேஜ் 3 பரவல் வந்து இருக்கும் என்றுதான் மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதேபோல் தமிழகத்தில் இப்போதெல்லாம் கொரோனா வரும் நபர்களை 90% பேருக்கு அறிகுறியே இல்லை.

    குழப்பும் பேட்டர்ன்

    குழப்பும் பேட்டர்ன்

    இதுதான் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 20 நாட்களில் கொரோனா மொத்தமாக குணமடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றப்படி பல மாவட்டங்களில் கொரோனா வேகம் குறைந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் மீண்டும் தமிழகத்தில் கொரோனா வேகம் எடுக்கிறது. மொத்தமாக கொரோனா வேகம் குறைத்துவிட்டு மீண்டும் வேகம் எடுத்து இருப்பது நிறைய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏன் இப்படி கிராப் ஏறி இறங்குகிறது என்று கேள்வி வருகிறது. இதனால் தமிழகத்தில் கொரோனா பேட்டர்ன் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Coronavirus pattern in Tamilnadu is confusing as the cases are rasing again in the state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X