தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மேலும் சரிவு.. இன்று 2708 பேருக்கு தொற்று!
தமிழகத்தில் இன்று 2708 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை மேலும் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2708 பேருக்கு தமிழகத்தில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அதிலும் சில நாட்களாக கொரோனா பாதிப்பானது 3000க்கும் கீழாக சரிந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 2708 ஆக குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 4014 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இன்று ஒரே நாளில் தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆகும். இதுவரை தமிழகத்தில் மொத்தம் 10956 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,11,713 ஆகும். இன்று தமிழகத்தில் எடுக்கப்பட்ட பிசிஆர் டெஸ்ட் எண்ணிக்கை 72,236. தமிழகத்தில் இன்று பிசிஆர் டெஸ்ட் எடுக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,898.
இன்று பாதிப்புக்குள்ளானோரில் 1634 பேர் ஆண்கள், பெண்களின் எண்ணிக்கை 1074 ஆகும்.












Click it and Unblock the Notifications