கொத்தா தாக்கும் கொரோனா.. தமிழகத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் பாதிப்பு.. 2 நாட்களில் 25% தொற்று!
தமிழகத்தில் இதுவரை மொத்தம் 4058 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
சென்னை: தமிழகத்தில் இதுவரை மொத்தம் 4058 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 25 சதவீத பாதிப்பு வெறும் 2 நாளில் ஏற்பட்டது என்பது அதிர வைப்பதாக உள்ளது.
நாடு முழுவதுமே கொரோனாவைரஸ் பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 46,711 லிருந்து 49,391 ஆக உயர்ந்துவிட்டது. தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் தமிழ்நாடுதான் தற்போது அதிர வைக்கும் வேகத்தில் போய்க் கொண்டுள்ளது.

5 நாட்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் பாதிப்புகள் வெகு வேகமாக உயரவில்லை. நிதானமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் சோதனைகள் அதிகரிக்கப்பட்ட பிறகு பாதிப்பு கிடுகிடுவென உயரத் தொடங்கியது. அதிலும் கடந்த 2 நாட்களில் உச்சத்தைத் தொட்டு விட்டது பாதிப்பு எண்ணிக்கை.
தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 4058 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 43 சதவீத பாதிப்பு 5 நாட்களில் ஏற்பட்டது என்றால், 25 சதவீத பாதிப்பு கடந்த 2 நாட்களில் வந்தது என்பது அதிர வைப்பதாக உள்ளது. சென்னைதான் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. 2000 பேருக்கும் மேல் இங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில்தான் உயிரிழப்பும் அதிகம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் சராசரியாக 500-க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். மறுபக்கம் பாதிக்கப்பட்டோர் வரிசையில், மகாராஷ்டிராவும் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. நேற்று மட்டும் அங்கு நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 841 ஆகும். மகாராஷ்டிர மாநிலத்தில் நோய் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 15, 525த்தை எட்டிவிட்டது.. ஏற்கனவே இங்கு 617 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல பஞ்சாபில் புதிதாக 219 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,451 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,293 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
நாடு முழுவதும் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 13,161லிருந்து 14,183 -ஆக அதிகரித்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 1,694- ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறுகிறது.












Click it and Unblock the Notifications