அதிர்ச்சி தரும் வீடியோ.. சென்னையா இது.. லாக்டவுன் தளர்வு அறிவிக்கப்பட்ட முதல் சன்டேயே மிக மோசம்!
சென்னை: சென்னையில் லாக்டவுன் தளர்வு அறிவிக்கப்பட்ட முதல் ஞாயிற்றுக் கிழமையே சாலைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து இருக்கிறது. இது தொடர்பாக வெளியான வீடியோக்கள் அதிர்ச்சி அளிக்க தொடங்கி உள்ளது.
Recommended Video
தமிழகத்தில் தினமும் சராசரியாக 5900 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் நேற்று 5870 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,57,697 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 965 பேர் சென்னையில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். . சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,40,685 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பரவலுக்கு இடையே தமிழகத்தில் லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்பட்டு ஒரு வாரம் ஆகிவிட்டது. இதனால் பெரும்பாலான சேவைகள் தமிழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ளது, இ பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஞாயிறு
அதேபோல் தமிழகத்தில் ஞாயிறு லாக்டவுனும் நீக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட முதல் ஞாயிறான இன்று தமிழகம் முழுக்க மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சிறு சிறு கோவில்களில், வழிபாட்டு தளங்களில் மக்கள் அதிகமாக கூடினார்கள். அதேபோல் இறைச்சி, மீன் கடைகளில் இன்று கூட்டம் அலைமோதியது. கன்னியகுமரி, சென்னை வரை அனைத்து கடற்கரையிலும் கூட்டம் அலைமோதியது.

கூட்டமாக வந்தனர்
மக்கள் வெகேஷன் விடுமுறையை போல பொது இடங்களுக்கு கூட்டம் கூட்டமாக வந்தனர். வார இறுதி நாளை கொண்டாட, கொரோனாவிற்கு மத்தியிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். அதோடு குழந்தைகள், முதியவர்களையும் அழைத்துக் கொண்டு இவர்களை பொது இடங்களுக்கு வந்தனர். முக்கியமாக இன்று சென்னையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

சென்னை கூட்டம்
சென்னையில் இருக்கும் காசி மேடு மார்க்கெட்டிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதேபோல் மெரினா பீச், பெசன்ட் நகர் பீச்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து வார இறுதியையே கொண்டாடினார்கள். பழையபடி இங்கே இளைஞர்கள் இன்று அதிகாலையே சென்னையில் கிரிக்கெட் விளையாடினார்கள். கூட்டம் கூட்டமாக வந்து, சமூக இடைவெளியின்றி இவர்கள் கிரிக்கெட் விளையாடினார்கள்.

வீடியோ வைரல்
சென்னையில் இருக்கும் பிரபல மைதானங்களில் இவர்கள் கிரிக்கெட் விளையாடிய வீடியோக்கள் தற்போது வெளியாகி உள்ளது. ஒருவர் கூட மாஸ்க் அணியாமல் கூட்டம் கூட்டமாக கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள். இங்கே போலீசாரும் எந்த விதமான கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. எல்லோரும் அவர்கள் விருப்பப்பட்டது போல சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications