சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சைனாக்காரன் வேலையை காட்டிட்டான்.. நிறுத்தப்பட்ட கிட் டெஸ்ட்கள்.. தவிப்பில் தமிழகம்.. என்னாகும்?

தமிழகத்திலும் ரேபிட் கிட் டெஸ்ட் நிறுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: "சைனாக்காரன் வேலையை காட்டிட்டான்" என்று நெட்டிசன்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.. கொரோனாவை உலக நாடுகளுக்கு அனுப்பி வைத்ததுடன் மட்டுமல்லாமல், தரமில்லாத மருத்துவ உபகரணங்களையும் விற்று மனிதாபிமானமே இல்லாமல் காசு பார்க்க ஆரம்பித்துவிட்டதே என்றும் பலரும் கடுப்பாகி வருகின்றனர்.

Recommended Video

    சீனாவை ஓரங்கட்டும் வெளிநாட்டு கம்பெனிகள்..இந்தியா பக்கம் திரும்பும் 1000 நிறுவனங்கள்

    புதிதாக வந்துள்ள ரேபிட் கிட்களை கொண்டு 2 நாள்களுக்கு எந்த டெஸ்ட்டும் செய்ய வேண்டாம் என்று ஐசிஎம்ஆர் அறிவித்தது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    ராஜஸ்தான், மேற்குவங்கம் மாநிலங்களில் ரேபிட் கிட் தவறான முடிவுகளை தந்து கொண்டிருப்பதாகவும், ரேபிட் டெஸ்ட் கிட்டை மீண்டும் பயன்படுத்துவது குறித்த அறிவுறுத்தல் விரைவில் வழங்கப்படும் என்றும், அதுவரை இந்த கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

    முயற்சி

    முயற்சி

    சீன வைரஸ் என்று சொன்னதற்கே சீனாவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.. ஏகப்பட்ட முரண்பட்ட கருத்துக்களையும் தெரிவித்து, தங்களை அப்பாவி போல காட்டி கொள்ளவே சீனா முயற்சித்தது.. உலக நாடுகளுக்கு பெருமளவு வைரஸ் பரவிய அதே நேரம், சீனாவில் வைரஸ் குறைந்து நடுத்தெருவில் பாம்பு உட்பட சகலத்துடன் கடைகளை விரித்து கொண்டு உட்கார்ந்து விட்டனர்.

    உற்பத்தி

    உற்பத்தி

    அடுத்தக்கட்டமாக வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பல நாடுகளுடன் மாஸ்க், கிளவுஸ், வெண்டிலேட்டர்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து, அதை பல கோடிக்கு விற்பதற்கான வேலையையும் சீனா கையில் எடுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. சுருக்கமாக சொல்லப்போனால், சீனாவில் பாதிக்கப்பட்ட நகரங்களில் பொருளாதார மண்டலங்கள் சீர்குலையாமல் உள்ளன.. கட்டுக்கோப்பாக உள்ளது!

    உற்பத்தி

    உற்பத்தி

    உலக நாடுகளில் பொருளாதாரம் சரிவை நோக்கி செல்லும் நிலையில், சீனாவுக்கு ஏறுமுகமாக உள்ளது.. அந்த அளவுக்கு மாஸ்க், உட்பட கிட்கள் வரை உற்பத்தி பெருகி வருகிறது.. எல்லா நாடுகளுமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உற்பத்தி செய்து வரும் இந்த கிட்டுகளை சீனாவில் இருந்துதான் வாங்க வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டது.. அப்படித்தான் இந்தியாவும் ரேபிட் கிட்களை வாங்கியது. மொத்தம் 3 லட்சம் ரேபிட் கிட்களை இந்தியா வாங்கியது.. இவைகள்தான் தரமற்றவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாக்காரன் வேலையை காமிச்சிட்டானா? என நெட்டிசன்கள் கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.

    ரேபிட் கிட்

    ரேபிட் கிட்

    சமீபத்தில், கேரள மெடிக்கல் கல்லூரியின் சித்ரா ஜெனிலேம்ப் என்ற நிறுவனம் ரேபிட் கிட்டை புதிதாக தயாரித்திருந்தது.. வெறும் 10 நிமிடங்களில் இந்த டெஸ்ட்டை எடுத்துவிடலாம் என்றும், 2 மணி நேரத்தில் ரிசல்ட் கிடைத்துவிடவும் இந்த கிட் உதவும் என்றும் செய்திகள் வந்தன.. மேலும் ஒரு மிஷினில் ஒரே நேரத்தில் 30 பேர்களுக்கு டெஸ்ட் செய்ய முடியும் என்றும் விளக்கம் தரப்பட்டது.. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும் தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். ஆனாலும் இந்த புதிய முயற்சியை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லையோ, அல்லது இனிமேலாவது நம் நாட்டின் தயாரிப்பை முழுமையாக நம்பி பயன்படுத்தி கொள்ள முன்வரப்படுமா என தெரியவில்லை.

    செல்சியஸ்

    செல்சியஸ்

    மலைபோல நம்பி, காத்து கிடந்த ரேபிட் கிட் கருவியில் டெஸ்ட் ரிசல்கள் துல்லியமாக இல்லை என்பதால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், 2 நாள்களுக்கு புதிதாக வந்துள்ள ரேபிட் கிட்டில் சோதனை செய்ய வேண்டாம். இந்த கருவியை 20 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக வெப்பநிலை உள்ள பகுதியில் வைத்து பாதுகாக்க வேண்டும். வெப்பம் அதிகமாக உள்ள இடத்தில் வைத்திருந்தால் சரியாக முடிவுகளை காட்டாது " என தெரிவித்துள்ளது.

    கிட்டுகள்

    கிட்டுகள்

    அந்த கிட்டுகளை வைத்துதான் தமிழகத்தில் டெஸ்ட்டுகள் செய்யப்பட்டு வருகின்றன.. இதனால் அடுத்த 2 நாட்களுக்கு இங்கும் டெஸ்ட்கள் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.. ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்டு, அந்த கிட்டுகள் வேறு பக்கமாக போய், திரும்பவும் நாம் ஆர்டர் செய்து, தாமதமாகத்தான் இப்போது கையில் வந்து சேர்ந்தது.. கிட்டுகள் கையில் கிடைத்த உடனேயே நாமும் டெஸ்ட்களை விறுவிறுப்பாக்கினோம்.. நமக்கும் ஓரளவு நம்பிக்கை துளிர்த்தது.. அதற்குள் கிட்கள் கோளாறு என்ற பிரச்சனை எழுந்துள்ளது.

    ஆபத்து

    ஆபத்து

    2 நாட்களுக்கு டெஸ்ட் செய்யப்பட மாட்டாது என்றால், நாளுக்குநாள் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாகும் சூழலில் இது மேலும் ஆபத்தைதான் உண்டுபண்ணும். சென்னையை நினைத்தாலே பயமாக உள்ளது.. உடனடியாக தரமான கிட்டுகள் தருவிக்கப்பட்டு டெஸ்ட்டுகளை மறுபடியும் தொடங்கினால்தான் நமக்கு நிம்மதியே!!

    English summary
    coronavirus: stop using chinese rapid test kits in tamilnadu also
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X