யாரும் இப்படி செய்யாதீங்க.. இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே ஆஸ்பத்திரிக்கு போங்க.. பீலா ராஜேஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: யாரும் சுய மருத்துவம் செய்ய வேண்டாம்.. காய்ச்சலோ, இருமலோ, மூச்சு விடுவதில் சிரமமோ இருந்தால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுமாறு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Recommended Video

    பிரதமர் முடிவை ஏற்க தமிழக அமைச்சரவை முடிவு- தலைமை செயலாளர்

    தமிழகத்தில் நேற்று மற்றும் புதிதாக 58 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒட்டுமொத்தமாக கொரோனா வைரஸ் தொற்றால் 969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மிக அதிகபட்சமாக சென்னையில் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவதாக கோவையில் 60 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 44 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    Coronavirus Symptoms: Anyone with fever cough or difficulty in breathing pl go to the nearest hospital , says Beela Rajesh

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு தமிழகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரையை ஏற்று நாடு முழுவதும் பிரதமர் மோடி ஊரடங்கை நீட்டிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இந்நிலையில் சமூக வலைதளத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இந்து வரும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷிடம் நெட்டிசன்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய் என்பவர், காய்ச்சல் வந்தால் சுய மருத்துவம் செய்வது ஆபத்தானது எனவே யாரையும் சுயமருத்துவம் செய்ய வேண்டாம் என்று தாங்கள் செய்தியாளர் சந்திப்பில் அறிவுறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    இதையடுத்து பீலா ராஜேஷ் டுவிட்டரில் விடுத்துள்ள வேண்டுகோளில் காய்ச்சல், இருமல் அல்லது மூச்சு விடுவதில் சிரமமோ இருந்தால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கைக்குட்டையை முகக்கவசமாய் பயன்படுத்திக் கொண்டு செல்லுங்கள் என பதிவிட்டுள்ளார். மேலும் தயவு செய்து வீட்டில் இருந்துகொண்டே சுயமருத்துவம் செய்யாதீர்கள், தொலைபேசியில் மருத்துவர்களை தொடர்புகொண்டுகூட அறிவுரை கேட்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+