கேம்சேஞ்சராகும் "மோல்னுபிரவீர்".. கொரோனாவை குணப்படுத்தும் உலகின் முதல் மாத்திரை? - செம பின்னணி
சென்னை: கொரோனா வைரசுக்கு எதிராக உலகின் முதல் மாத்திரையாக மோல்னுபிரவீர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் சிகிச்சையில் மோல்னுபிரவீர் மிகப்பெரிய கேம் சேஞ்சராக இருக்கும் என்று மருத்துவ வல்லுனர்கள் பலர் தெரிவித்து உள்ளனர்.
உலகம் முழுக்க கொரோனாவிற்கு எதிராக கோவிஷீல்ட், கோவாக்சின், ஃபைசர், மாடர்னா என்று பல வேக்சின்கள் இருக்கின்றன. இவை எல்லாம் கொரோனாவை தடுக்கும் தடுப்பூசிகள்தான். ஆனால் கொரோனா வந்தவர்களை குணப்படுத்தும் மருந்துகள் இன்னும் மார்கெட்டிற்கு வரவில்லை.
அதாவது கொரோனா வந்த பின்.. இந்த மாத்திரை சாப்பிட்டால் போதும் குணமாகிவிடலாம் என்று கூறும் அளவிற்கு இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. நோயாளிகளுக்கு இருக்கும் அறிகுறிகளை வைத்து அதற்கு மட்டும் மருந்து கொடுத்து மருத்துவம் பார்க்கிறார்கள்.

மருத்துவம்
உதாரணமாக கொரோனா நோயாளிக்கு இருமல் இருந்தால் இருமல் மருந்து, காய்ச்சல் இருந்தால் காய்ச்சல் மருந்து, மூச்சு பிரச்சனை இருந்தால் அது தொடர்பான சிகிச்சைகள் வழங்கப்படும். மாறாக இதுதான் கொரோனாவிற்கு தீர்வு என்று இதுவரை உறுதியாக மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஐவர்மெக்டின், ரெம்டிஸ்வர் போன்ற மருந்துகள் சில காலம் பயன்படுத்தப்பட்டு, பின்னர் மருத்துவ ரீதியாக அதன் பலன்கள் உறுதி செய்யப்படாததால் அந்த மருந்துகள் கைவிடப்பட்டது.

நிறுவனம்
இந்த நிலையில் ஐவர்மெக்டிக் மருந்தை உருவாக்கிய அதே நிறுவனமான மெர்க் நிறுவனம் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மோல்னுபிரவீர் மருந்தை உருவாக்கி உள்ளது. அதாவது இது கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மாத்திரை ஆகும். அறிகுறியோடு உள்ள கொரோனா நோயாளிகள், கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள், கொரோனா கண்டறியப்பட்டவர்களுக்கு மோல்னுபிரவீரை பரிந்துரை செய்யலாம் என்று இந்த நிறுவனம் கூறியுள்ளது.
Recommended Video

அமெரிக்கா
அமெரிக்காவை சேர்ந்த Ridgeback Biotherapeutics என்ற நிறுவனத்தோடு இணைந்து மோல்னுபிரவீர் மருந்தை இந்த மெர்க் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இதுவரை செய்யப்பட்ட மூன்று கட்ட சோதனையில் மோல்னுபிரவீர் மருந்து கொரோனா நோயாளிகளின் உடல் மோசம் ஆவதையும், மரணம் அடைவதையும் தடுத்து உடனே குணமடைய வழி செய்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 775 கொரோனா நோயாளிகளிடம் இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது.

சோதனை
அதில் சிலருக்கு மோல்னுபிரவீர் மருந்தும், சிலருக்கு சத்து மாத்திரையும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மோல்னுபிரவீர் எடுத்தவர்கள் 7.3 பேர் மட்டுமே மருத்துவமனையில் சேரும் அளவிற்கு உடல் நலிந்துள்ளது. அதே சமயம் சத்து மாத்திரை எடுத்தவர்களில் 14.1 சதவிகிதம் பேரின் உடல்நிலை மோசமாகி உள்ளது. அதோடு மோல்னுபிரவீர் எடுத்த யாரும் பலியாகவில்லை, மாறாக சத்து மாத்திரை எடுத்த 8 பேர் பலியாகி உள்ளனர்.

எப்படி வேலை செய்யும்?
பொதுவாக கொரோனா வைரஸ் உடலில் புகுந்ததும் தனது ஆர்என்ஏ மூலம் இரண்டு, மூன்று என்று பல பிரதிகளை எடுத்துக்கொள்ளும். இப்படி கொரோனா வைரஸ் பிரதி எடுத்துக்கொள்வதன் மூலம் உடலில் பல்கி பெருகி பாதிப்பை ஏற்படுத்தும். மோல்னுபிரவீர் கொரோனா வைரஸின் இந்த ஆர்என்ஏ பிரதி எடுத்தலை தடுக்கும். அதாவது கொரோனா வைரஸின் ஆர்என்ஏவை மோல்னுபிரவீர் தன்னை போல பிரதி எடுக்க வைத்து ஏமாற்றும். இதனால் கொரோனா வைரஸின் ஆர்என்ஏ உடலில் குறைந்து கொரோனாவின் ஆதிக்கத்தை குறைக்கும் .

ஆர்என்ஏ
கொரோனா உடலில் பெருகினால்தானே பாதிப்பு அதிகரிக்கும். இதனால் நேரடியாக கொரோனாவின் ஆர்என்ஏ பிரதி எடுத்தலையே தடுத்து மோல்னுபிரவீர் உடலை குணப்படுத்துகிறது. இந்த மோல்னுபிரவீர் டெல்டா, மு, காமா வகை கொரோனாவிற்கு எதிராகவும் இது சிறப்பாக செயலாற்றுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மோல்னுபிரவீர் கொரோனா சிகிச்சையில் பெரிய கேம் சேஞ்சராக இருக்க போகிறது.

யு.கே
அமெரிக்காவில் ஏற்கனவே இந்த மோல்னுபிரவீர் மருந்துக்கு அந்நாட்டு மருந்து கட்டுப்பட்டு இயக்குனரகம் ஆர்டர் கொடுத்துள்ளது. அதேபோல் யு.கேவில் மோல்னுபிரவீர் மருந்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டுவிட்டது. யு.கேவில் லாக்வ்ரியோ என்ற பெயரில் இந்த மருந்து விற்கப்பட உள்ளது. மற்ற நாடுகளிலும் விரைவில் இந்த மருந்து அமலுக்கு வரும் வாய்ப்புகள் உள்ளன.

எப்படி உதவுகிறது
கொரோனா நோயாளிகள் மோசமாக பாதிக்கப்படுவதை தவிர்த்து ஆரம்பத்திலேயே பரவலை இது குணப்படுகிறது. இதனால் பல புதிய வேரியண்ட்கள் உருவாவது குறையும், அதேபோல் பலி எண்ணிக்கை குறையும். மாத்திரை வடிவில் கிடைப்பதால் எளிதாக மருத்துவரின் அனுமதியோடு காய்ச்சலுக்கு மருந்து எடுப்பது போல வரும் காலத்தில் மோல்னுபிரவீரை பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications