அதுமட்டும்தான் பிரச்சனை.. சென்னையில் தொடர்ந்து கேஸ்கள் அதிகரிக்கிறது.. மாநகராட்சி கொடுத்த விளக்கம்!

சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரிக்க என்ன காரணம் என்று மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரிக்க என்ன காரணம் என்று மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

    ஊரடங்கிற்குள் ஒரு ஊரடங்கு! சென்னையில் எகிறும் கொரோனா

    தமிழகத்தில் கொரோனா தீவிரம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. சென்னையிலும் கொரோனா வேகமாக பரவ தொடங்கி உள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 104 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கொரோனாவால் மொத்தமாக 2162 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ஒரே நாளில் 94 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தமாக 768 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    இந்த நிலையில் சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரிக்க என்ன காரணம் என்று மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். அதில், சென்னையில் கொரோனா பரவும் வேகம் பெரிய அளவில் சவால் அளிக்கிறது. சென்னையில் 1.45 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இந்த எண்ணிக்கையை உயர்த்த முடிவு செய்து இருக்கிறோம்.

    6 மண்டலம் எப்படி

    6 மண்டலம் எப்படி

    சென்னையில் மொத்தம் 6 மண்டலங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் ராயபுரத்தில் பாதிப்பு அதிகமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள 6 மண்டலங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இங்கு சமூக விலகலை கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். மக்கள் மிக தீவிரமாக இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    நெருக்கடி காரணம்

    நெருக்கடி காரணம்

    மக்கள் நெருக்கடிதான் சென்னையில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க காரணம். சென்னையில் ஒரு ச.கி.மீ.-க்கு 26,000 முதல் 55,000 பேர் வரை வசிக்கிறார்கள். தமிழகத்தில் வேறு எங்கும் இந்த நிலை இல்லை. இதேபோல் அதிக மக்கள் தொகை இருக்கும் வேறு மாநில நகரங்களில் இதை விட அதிக கேஸ்கள் உள்ளது. சென்னையில் அவர்களுடன் ஒப்பிடும் போது குறைவான கேஸ்கள்தான் இருக்கிறது.

    வாழ்க்கை முறைதான் காரணம்

    வாழ்க்கை முறைதான் காரணம்

    இந்த நெருக்கடியான மக்கள் வாழ்க்கை முறைதான் அதிக கொரோன கேஸ்களுக்கு காரணம். தமிழகத்தில் எந்த கிராமத்திலும் இந்த அளவிற்கு நெருக்கடி இல்லை. அதேபோல் தமிழகத்தில் சென்னையில்தான் அதிகமான நபர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 22 ஆயிரம் பேருக்கு தமிழகத்தில் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

    சதவிகித அடிப்படை

    சதவிகித அடிப்படை

    இதில் 768 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சதவிகித அடிப்படையில் இது குறைவுதான். அதனால் நாம் பெரிய அளவில் அச்சம் அடைய தேவையில்லை. சென்னையில் கொரோனா சோதனைகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். சென்னையில் நாள் ஒன்றுக்கு தற்போது 1000+ சோதனைகள் செய்யப்படுகிறது. இதை 2000+ சோதனைகளாக அதிகரிக்க முடிவு செய்து இருக்கிறோம், என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+