கம்யூனிட்டி பரவல்?.. சைதாப்பேட்டையில் அந்த ஒரு கேஸ்.. கொரோனா வந்தது எப்படி? நீடிக்கும் மர்மம்!
சென்னையில் சைதாப்பேட்டை நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டு இருப்பதால் தமிழகத்தில் ஸ்டேஜ் 3 வைரஸ் பரவல் ஏற்பட்டு விட்டதா என்று கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: சென்னையில் சைதாப்பேட்டை நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டு இருப்பதால் தமிழகத்தில் ஸ்டேஜ் 3 வைரஸ் பரவல் ஏற்பட்டு விட்டதா என்று கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 519ஐ தாண்டி உள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா காரணமாக 11 பேர் பலியாகி உள்ளனர். அதிகமாக கேரளாவில் 109 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் 107 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இன்னும் ஸ்டேஜ் 3 கொரோனா பரவல் ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் எத்தனை
இதையடுத்து நேற்று இரவு தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு உறுதியானது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து சென்னை வந்தவர்களில் 3 பேருக்கு கொரோனா இருப்பது தற்போது உறுதியானது. நியூசிலாந்தில் இருந்து சென்னை வந்தவர், இவருக்கு 65 வயது. இவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சைதாப்பேட்டை நபர்
அதேபோல் லண்டனில் இருந்து சென்னை வந்தவர், இவருக்கு 25 வயதுதான் ஆகிறது. இவர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த இன்னொருவர் மூவருக்கும் கொரோனா ஏற்பட்டுள்ளது. ஆனால் இவர்தான் கொஞ்சம் சிக்கலான நபர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வெளிநாடு செல்லவில்லை. இவரின் உறவினர்கள் யாருக்கும் கொரோனா வைரஸ் இல்லை.

சைதாப்பேட்டையில் கொரோனா எப்படி வந்தது ?
இதுதான் தற்போது பல கேள்விகளை எழுப்பி உள்ளது. சைதாப்பேட்டையை சேர்ந்த இவருக்கு எப்படி கொரோனா ஏற்பட்டது. யார் மூலம் கொரோனா ஏற்பட்டது என்று கேள்விகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணைகள் நடந்து வருகிறது. இவர் சந்தித்த நபர்கள், பேசிய நபர்கள், தொடர்பு கொண்ட நபர்கள் எல்லாம் யார் என்று விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் துப்பு துலங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டேஜ் 3 என்றால் என்ன
பொதுவாக கொரோனா ஒருவருக்கு வெளிநாடு செல்லாமலே ஏற்பட்டால் அதற்கு இரண்டு காரணங்கள் இருக்க வாய்ப்புள்ளது. ஒரு காரணம், அந்த நபரின் உறவினர்கள் யார் மூலமாவது கொரோனா பரவி இருக்கலாம். இரண்டாவது காரணமாக அந்த நபர் பொது இடத்தில் அவருக்கே தெரியாமல் சந்தித்த, பேசிய நபர்கள் யாரின் மூலமாவது கொரோனா பரவி இருக்கலாம். இந்த வகை பரவல் ஸ்டேஜ் 3 என்று அழைக்கப்படும். இதை கம்யூனிட்டி ஸ்பிரெட் என்று அழைப்பார்கள்.

ஸ்டேஜ் 3 சென்னையிலும் வந்துவிட்டதா?
இந்த நிலையில் சென்னையில் இந்த ஸ்டேஜ் 3 பரவல் வந்துவிட்டதா என்று கேள்வி எழுந்துள்ளது. சைதாப்பேட்டை நபருக்கு கொரோனா வந்தது இன்னும் மர்மமாக இருக்கிறது. அவருக்கு ஒருவேளை கொரோனா பொது இடத்தில் இருந்து வந்து இருந்தால் அது பெரும்பாலும் ஸ்டேஜ் 3 ஆக இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். ஸ்டேஜ் 3 ஏற்பட்டுவிட்டால் அதை கட்டுப்படுத்துவது கடினமும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications