இந்த மூன்றும் முக்கியம்.. இதுதான் அறிகுறி.. கொரோனா பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
கொரோனா வைரஸ் உங்களை தாக்கி இருந்தால் மொத்தம் மூன்று விதமான முக்கிய அறிகுறிகள் மூலம் அதை கண்டுபிடிக்க முடியும்.
சென்னை: கொரோனா வைரஸ் உங்களை தாக்கி இருந்தால் மொத்தம் மூன்று விதமான முக்கிய அறிகுறிகள் மூலம் அதை கண்டுபிடிக்க முடியும்.
Recommended Video
கொரோனா வைரஸ் குறித்து உலக ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கி உலகம் முழுக்க பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் தீவிர ஆராய்ச்சிகளை செய்து வருகிறார்கள். இந்த வைரஸ் எப்படிப்பட்ட வைரஸ் என்று இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை.
அதேபோல் இந்த வைரஸ் எப்படி உருவானது, எப்படி குணப்படுத்துவது என்றும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் அறிகுறிகள் மற்றும் வெகு சில பின் விளைவுகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் கொரோனா அறிகுறி குறித்து மக்கள் அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.

என்ன அறிகுறி
இருமல்தான் கொரோனாவின் முதல் அறிகுறி ஆகும். ஆனால் இந்த இருமல் சாதாரணமாக இருக்காது. இது வறட்டு இருமல் போல இருக்கும். ஆனால் வெறும் சாதாரண வறட்டு இருமல் போல இது இல்லாமல் கொஞ்சம் வலியோடு இருக்கும். நீங்கள் கொரோனா வந்து இருமினால் உங்கள் மூச்சு குழல் அடைக்கும். இருமலின் போதே உங்கள் இதயம் லேசாக வலிக்கும். மூச்சு குழலில் இருமலின் போது ஊசி வைத்து குத்துவது போல வலி ஏற்படும்.

தொண்டை எப்படி
சில சமயம் உங்கள் தொண்டை எரிவது போல உணர்வு ஏற்படும். இதுதான் உங்களுக்கு ஏற்படும் முதல் அறிகுறி. அடுத்த அறிகுறி காய்ச்சல். உங்கள் உடல் சூடு அதிகரிக்கும். காய்ச்சல் அதிகமாக இருந்தால் அது கொரோனா அறிகுறியாக இருக்கலாம். 99.5 டிகிரி ஃபெரன்ஹீட் வரை உங்களுக்கு உடல் வெப்பநிலை இருந்தால் பிரச்சனை, சிக்கல் இல்லை.

காய்ச்சல் எப்படி
ஆனால் அதற்கு மேல் உடல் வெப்பநிலை இருந்தால் அதுதான் காய்ச்சல். இது கொரோனாவிற்கு ஒரு அறிகுறி ஆகும். இந்த மூன்றாவது அறிகுறிதான் முக்கியமானது ஆகும். மூன்றாவது அறிகுறி இருந்தால் உங்களுக்கு கொரோனா இருப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதை கொஞ்சம் சீரியஸான அறிகுறி என்று உலக சுகாதார மையம் வரையறுக்கிறது. இந்த அறிகுறி இருந்தால் உடனே நீங்கள் மருத்துவரை பார்க்க வேண்டும்.

வயிற்றுப்போக்கு
இது இல்லாமல் உங்களுக்கு சமயங்களில் வயிற்றுப்போக்கும் அறிகுறியாக இருக்கலாம். காய்ச்சல் இல்லாமல் நெஞ்சு மட்டும் வலித்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம். சிலருக்கு அறிகுறிகள் வித்தியாசமாக இருக்கும். ஜலதோஷம், அஜீரண கோளாறு, பசியின்மை, தலைவலி, உடல் வலி, சோர்வு ஆகியவை கூட அறிகுறியாக இருக்கலாம். இதை எல்லாம் நீங்கள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

சவால் என்ன
அதே சமயம் சிலருக்கு இந்த அறிகுறி எதுவும் இல்லாமலே கொரோனா ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை உலகில் கொரோனா ஏற்பட்டவர்களில் வெகு சிலருக்கு எந்த விதமான அறிகுறியும் இன்றி கொரோனா வைரஸ் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் நீங்கள் எப்போதும் கவனமாக இருப்பது மிக முக்கியமானது ஆகும். உங்கள் வாழ்க்கை முறையில் சுத்தம் மற்றும் பாதுகாப்பு இரண்டையும் ஒரு அங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications