சென்னையில் எங்கே தவறு நடந்தது? ஏன் கொரோனா அதிகரிக்கிறது.. இன்று முதல்வர் பழனிசாமி முக்கிய மீட்டிங்
சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் தமிழக முதல்வர் பழனிசாமி இன்று முக்கியமான ஆலோசனை கூட்டத்தை நடத்த இருக்கிறார் .
சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் தமிழக முதல்வர் பழனிசாமி இன்று முக்கியமான ஆலோசனை கூட்டத்தை நடத்த இருக்கிறார் .
தமிழகத்தில் நேற்று 527 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் தமிழகத்தில் இத்தனை பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 3550 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று மட்டும் 266 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1724 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஆலோசனை
நேற்று அதிக அளவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதற்கு கோயம்பேடு சந்தை காரணம் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் தமிழக முதல்வர் பழனிசாமி இன்று முக்கியமான ஆலோசனை கூட்டத்தை நடத்த இருக்கிறார். சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சிறப்பு அதிகாரிகள் உடன் ஆலோசனை செய்ய இருக்கிறார்.

முக்கிய அதிகாரிகள் வருகிறார்கள்
சென்னை அம்மா மாளிகையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சி அதிகாரிகளான மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் உடன் முதல்வர் ஆலோசனை செய்ய இருக்கிறார். அதேபோல் சென்னையை சேர்ந்த முக்கிய சில மருத்துவர்களும் இதில் கலந்து கொள்கிறார்கள்.

யார் எல்லாம் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்
தலைமை செயலாளர் சண்முகம், சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ், சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இவர்கள் ஆலோசனை செய்கிறார்கள். இதனால் இந்த கூட்டம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. சென்னையில் எங்கே தவறு நடந்தது, எப்படி திடீர் என்று கேஸ்கள் அதிகரித்தது.

ஆக்சன் பிளான்
இதை இனி எப்படி தடுப்பது என்று திட்டமிட இருக்கிறார்கள். சென்னையில் டெஸ்டிங் முறையை தீவிரப்படுத்துவது எப்படி. காண்டாக்ட் டிரேசிங் முறைகளை தீவிரமாக்குவது எப்படி என்று ஆலோசனை செய்ய இருக்கிறார்கள்.இந்த ஆலோசனையின் மூடில் முக்கியமான ஆக்சன் பிளான் ஏதாவது தயார் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல் சென்னைக்கு என்று சிறப்பு அறிவிப்புகள் வெளியாகும் என்கிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications