தமிழகத்தில் லாக்டவுன் 2 வாரங்கள் நீட்டிப்பு- 3 நாட்களுக்கு வழிபாட்டு தலங்களில் தடை-பள்ளிகள் திறப்பு
சென்னை: தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் லாக்டவுன் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். மேலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் அனைத்து மதவழிபாட்டு தலங்களிலும் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1-ந் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று லேசாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் பல மாவட்டங்களில் கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி போடுதலும் படுதீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடனான லாக்டவுன் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா தொற்று பரவலின் தன்மை, தாக்கம் தொடர்பாக இன்று தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

3 நாட்களுக்கு தடை
மாவட்ட வாரியான நோய்ப் பரவல், லாக்டவுன் கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு, கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் செயலாக்கம் குறித்து இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் நடைமுறையில் உள்ள லாக்டவுன் வரும் 9-ந் தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதனால் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடன் நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அதிக அளவில் பொதுமக்கள் ஒரே நேரத்தில் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மதவழிபாட்டு தலங்களிலும் வழிபாட்டுக்கு மட்டும் தடை விதிக்கப்படுகிறது.

2 வாரங்களுக்கு நீட்டிப்பு
இக்கட்டுப்பாடுகளுடன் வரும் 23-ந் தேதி காலை 6 மணி வரை மேலும் 2 வாரங்களுக்கு லாக்டவுன் நீட்டிக்கப்படுகிறது. கடந்த வாரத்தில் கூட்டம் அதிகமாக கூடக் கூடிய நிகழ்வுகள், சந்தை பகுதிகளில் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாநகராட்சி ஆணையர்கள் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது. இன்று காலையில் நடைபெற்ற மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமித்த கருத்தாக பள்ளிகள் திறக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
Recommended Video

செப்.1 முதல் பள்ளிகள் இயங்கும்
பள்ளிகள் செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது குழந்தைகளிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் ஏற்படுத்தி வருவதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர். மேலும் இணையம் மூலமாக நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் பெரும்பாலான பிள்ளைகளுக்கு கிடைக்காத சூழ்நிலை உள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். அனைத்து தரப்பு கருத்துகளையும் ஆராய்ந்து அதனடிப்படையில் செப்டம்பர் 1-ந் தேதி முதல் 9,10,11,12-ம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50% மாணவர்களுடன் கொரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் துவங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரிகள், செவிலியர் படிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், ஆகஸ்ட் 16-ந் தேதியில் இருந்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகள்
நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதிக்க வேண்டும். வீடு வீடாக கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். இறைச்சி மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்க, திறந்தவெளியில் தனித்தனி கடைகளாகப் பிரித்து விற்பனை செய்வதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதித்து செயல்படும் வணிக, இதர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் அனைவரும் அரசியல் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications