தமிழக பொருளாதாரத்தை மீட்க அதிரடி திட்டம்.. முன்னாள் ஆர்பிஐ இயக்குனர் சி.ரங்கராஜன் தலைமையில் குழு!
சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டு இருக்கும் மோசமான பொருளாதார சரிவை சமாளிக்கும் வகையில் புதிய உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவிற்கு ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரங்கராஜன் தலைமை ஏற்றுள்ளார்.
நாடு முழுக்க மே 3ம் தேதி வரை கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த, நோயை கட்டுப்படுத்தவும் நாடு முழுக்க 40 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் இதனால் கடுமையாக நிதி நெருக்கடிக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் இதனால் கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பொருளாதார பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு மாநிலங்களில் புதிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் அங்கு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டு இருக்கும் மோசமான பொருளாதார சரிவை சமாளிக்கும் வகையில் புதிய உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் இந்த குழுவிற்கு ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரங்கராஜன் தலைமை ஏற்றுள்ளார்.
இந்த குழு மூன்று மாதத்திற்குள் அரசிடம் அறிக்கை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குழுவில் மொத்தம் 24 பேர் இடம்பெற்றுள்ளனர். பல்வேறு பிரிவுகளை சேர்ந்த வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர். முக்கியமாக தொழிற்துறை வல்லுநர்கள் பலர் இதில் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல் இந்த அமைப்பில் யுனிசெப் உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சரிவை சரி செய்யும் வகையிலும் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையிலும், முதலீடுகளை அதிகரிக்கும் வகையிலும் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications