தமிழகத்தில் யாருக்கெல்லாம் கொரோனா.. எந்த ஊர்? எப்போது வந்தனர்? முக்கிய விவரங்களை வெளியிட்ட அரசு!
கொரோனா வைரஸால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை: கொரோனா வைரஸால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. முதல் முறையாக இவர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பெரிய கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தாக்குதல் தற்போது 150 நாடுகளுக்கும் அதிகமாக பரவி உள்ளது.
இந்தியாவில் மட்டும் 440 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. தமிழகத்தில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கு கொரோனா குணப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதில் 9 பேரின் விவரம் வெளியாகி உள்ளது.

தமிழகம் நிலை
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பெயர் மற்றும் பாலினம் தவிர்த்து மற்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. நபர் 1 - 45 வயது காஞ்சிபுரத்தை சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 28-2-2020 அன்று சென்னை விமான நிலையம் வந்தார். ஓமனில் இருந்து சென்னை வந்தார். 7-3-2020 அன்று கொரோனா வைரஸ் இவருக்கு உறுதி செய்யப்பட்டது.
நபர் 2 - 25 வயது உத்தர பிரதேசத்தை சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 13-3-2020 அன்று சென்னை விமான நிலையம் வந்தார். டெல்லியில் இருந்து சென்னை வந்தார். 18-3-2020 அன்று கொரோனா வைரஸ் இவருக்கு உறுதி செய்யப்பட்டது.

நான்காவது கேஸ்
நபர் 3- 21 வயது சென்னையை சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 17-2-2020 அன்று சென்னை விமான நிலையம் வந்தார். அயர்லாந்தில் இருந்து சென்னை வந்தார். 20-3-2020 அன்று கொரோனா வைரஸ் இவருக்கு உறுதி செய்யப்பட்டது.
நபர் 4 - 65 வயது சென்னை சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 15-2-2020 அன்று சென்னை விமான நிலையம் வந்தார். நியூசிலாந்து டூ சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்தார். 21-3-2020 அன்று கொரோனா வைரஸ் இவருக்கு உறுதி செய்யப்பட்டது.

ஐந்து மற்றும் ஆறாவது நபர்
நபர் 5 - 69 வயது ஈரோட்டை சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 11-2-2020 அன்று சென்னை விமான நிலையம் வந்தார். தாய்லாந்தில் இருந்து ஈரோடு வந்தார். 21-3-2020 அன்று கொரோனா வைரஸ் இவருக்கு உறுதி செய்யப்பட்டது.
நபர் 6- 75 வயது ஈரோட்டை சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 11-2-2020 அன்று சென்னை விமான நிலையம் வந்தார். தாய்லாந்தில் இருந்து ஈரோடு வந்தார். 21-3-2020 அன்று கொரோனா வைரஸ் இவருக்கு உறுதி செய்யப்பட்டது.
நபர் 7 - 25 வயது கோபம்ப்புத்தூர் சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 15-2-2020 அன்று சென்னை விமான நிலையம் வந்தார். ஸ்பெயினில் இருந்து டெல்லி சென்று அங்கு இருந்து பெங்களூர், அங்கு இருந்து கோவை வந்தார். 22-3-2020 அன்று கொரோனா வைரஸ் இவருக்கு உறுதி செய்யப்பட்டது.

கடைசி இரண்டு கேஸ்கள்
நபர் 8 - 43 வயது திருநெல்வேலி சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 20-2-2020 அன்று சென்னை விமான நிலையம் வந்தார். துபாயில் இருந்து மதுரை வந்தார். 22-3-2020 அன்று கொரோனா வைரஸ் இவருக்கு உறுதி செய்யப்பட்டது.
நபர் 9 - 64 வயது சென்னை சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 20-2-2020 அன்று சென்னை விமான நிலையம் வந்தார். அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூர் வந்து அங்கு இருந்து சென்னை வந்தார். 22-3-2020 அன்று கொரோனா வைரஸ் இவருக்கு உறுதி செய்யப்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications