எல்லோரையும் சோதிக்க வேண்டும்.. காண்டாக்ட் டிரேஸ் முறையை கையில் எடுத்த தமிழக அரசு.. கொரோனா சோதனை!
தமிழகத்தில் வேறு யாருக்கும் கொரோனா பரவி உள்ளதா என்று தீவிரமாக சோதனை நடந்து வருகிறது.
சென்னை: சென்னையில் கொரோனா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் வேறு யாருக்கும் கொரோனா பரவி உள்ளதா என்று தீவிரமாக சோதனை நடந்து வருகிறது.
Recommended Video
யாருமே எதிர்பார்க்காத வேகத்தில் உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தமிழகத்திலும் முதல் நபர் ஒருவருக்கு கொரோனா பரவி உள்ளது. இவருக்கு ஓமன் நாட்டிற்கு சென்று திரும்பிய பின் கொரோனா ஏற்பட்டுள்ளது.
நேற்றுதான் இவருக்கு இந்த வைரஸ் தாக்கியது.இவரை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இவர் தொடர்பு கொண்ட நபர்களை எல்லாம் தற்போது சோதனை செய்த முடிவு செய்துள்ளனர்.

வேறு யார்
இந்த நிலையில் தமிழகத்தில் வேறு யாருக்கும் கொரோனா பரவி உள்ளதா என்று தீவிரமாக சோதனை நடந்து வருகிறது. இதற்காக காண்டாக்ட் டிரேஸ் முறையை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொடுதல் மூலம் பரவ கூடிய வைரஸ் ஆகும். ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு இது எளிதாக பரவும். இதனால் இந்த வைரஸ் தாக்குதல் யாருக்கு இருக்கோ அவர்கள் யாரை எல்லாம் தொட்டார்களோ அவர்களை கண்டுபிடிக்க வேண்டும்.

கண்டுபிடிக்க வேண்டும்
அவர்களுக்கும் நோய் தாக்குதல் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க வேண்டும். இதை காண்டாக்ட் டிரேஸ் முறை என்பார்கள். இந்த கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக இதே முறையை பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கேரளா இதே முறையை பயன்படுத்திதான் கொரோனாவை கட்டுப்படுத்தியது. சீனாவிலும் இந்த முறை வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

என்ன செய்வார்கள்
அதன்படி சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நபர் ஓமன் சென்றுவிட்டு திரும்பிய பின் தமிழகத்தில் யாரை எல்லாம் பார்த்தார் என்றும் விசாரணை நடத்துவார்கள். தமிழகத்தில் யாருடன் எல்லாம் நெருக்கமாக இருந்தார் என்று விசாரிப்பார்கள். அவர் சந்தித்த நபர்கள், பழகிய நபர்கள் எல்லோரையும் சோதனை செய்வார்கள் . அவரின் குடும்ப உறுப்பினர்களை சோதனை செய்வார்கள்.

தனிமை படுத்துவார்கள்
இவர்கள் யாருக்காவது நோய் தாக்குதல் இருந்தால், காய்ச்சல் இருந்தால் அவர்களை சோதனை செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குறிப்பிட்ட நபர் ஓமனில் இருந்து சென்னை வந்து இரண்டு வாரத்திற்கும் மேல் ஆகிவிட்டது,. அதனால் இவர் சென்னையில் பலரை சந்தித்து இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே சென்னையில் பலர் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications