சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேண்டுகோள் அல்ல.. அது அரசின் உத்தரவு.. செய்தியாளர் சந்திப்பில் கொந்தளித்த விஜயபாஸ்கர்.. ஏன்?

நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மிகவும் கோபமாக சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மிகவும் கோபமாக சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

    TN imposes 144 | தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு.. முதல்வர் முக்கிய அறிவிப்பு

    கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இன்று மாலையில் இருந்து இந்த தடை உத்தரவு உள்ளது அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் 12 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

    நேற்று மட்டும் தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உடல் நிலை கொஞ்சம் மோசமாகி உள்ளது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இதுகுறித்து பேட்டி அளித்துள்ளார்.

    மதுரையில் அவருக்கு எப்படி கொரோனா ஏற்பட்டது?.. புதிர்.. ஸ்டேஜ் 3 நோக்கி செல்கிறதா தமிழகம்.. பின்னணி! மதுரையில் அவருக்கு எப்படி கொரோனா ஏற்பட்டது?.. புதிர்.. ஸ்டேஜ் 3 நோக்கி செல்கிறதா தமிழகம்.. பின்னணி!

    தமிழகத்தில் அதிக பேர்

    தமிழகத்தில் அதிக பேர்

    விஜயபாஸ்கர் தனது பேட்டியில், தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அதிகம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு, கன்னியாகுமரி, திருச்சி, சிவகங்கை, திருநெல்வேலி, கோவை, புதுக்கோட்டை, திருவாரூர் உட்பட 10 மாவட்டங்களில் பாதிப்பு அதிகம், உள்ளது. முகக்கவசம் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் 10 ஆயிரம் படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எத்தனை பேர் தனிமையில் உள்ளனர்

    எத்தனை பேர் தனிமையில் உள்ளனர்

    தமிழகத்தில் 12,519 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் வீட்டிலேயே கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆனால் மக்கள் சிலர் இதை கேட்பதில்லை. எங்கள் தடையை மீறி வெளியே வருகிறார்கள். இதனால் அவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கிறோம். இவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் இருக்கிறார் என்பதை உணர்த்தும் வகையில் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கிறோம்.

    வீட்டில் தனியாக இருங்கள்

    வீட்டில் தனியாக இருங்கள்

    வீட்டில் தனிமையாக இருங்கள் என்பது வேண்டுகோள் அல்ல, அது அரசின் உத்தரவு. அரசின் உத்தரவை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். பலர் ரகசியமாக வீட்டை விட்டு வெளியேற முயற்சி செய்கிறார்கள். இது போன்ற நபர்களை சும்மா விட மாட்டோம். இதை அனுமதிக்க முடியாது. வீடு வீடாக தேடி பிடித்து இந்த பணிகளை செய்து வருகிறோம்.

    இதுதான் மிக முக்கியம்

    இதுதான் மிக முக்கியம்

    நீங்கள் வீட்டில் இருக்க வேண்டும். உங்கள் மூலம்தான் இந்த வைரஸ் பரவுகிறது. இது உங்கள் கடமை. இதை நீங்கள் செய்ய வேண்டும். உங்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்களின் நலனுக்காக. மக்களின் நலனுக்காகத்தான. அதனால் 144 உத்தரவு போடப்பட்டுள்ளது. இது அரசின் கடமை. நீங்கள் எங்கள் கோரிக்கையை ஏற்று எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என்று மக்கள் வெளியே சுற்றுவது குறித்து விஜயபாஸ்கர் கோபமாக தெரிவித்துள்ளார்.

    English summary
    Coronavirus: TN Health Minister Vijayabaskar gets angry in Press Meet, Why?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X