கோவையில் தொடர்ந்து உச்சம்.. தமிழகத்தில் இன்று 5,752 பேருக்கு கொரோனா.. மொத்தமாக 508511 பேர் பாதிப்பு
சென்னை: 5,752 பேருக்கு இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 508511 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரமாக சராசரியாக ஒரே அளவில் கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகிறது. இந்தியாவில் தினசரி கேஸ்கள் சராசரியாக 90 ஆயிரத்தை தாண்டி தினமும் பதிவாகி வருகிறது.
ஆனால் தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் தினமும் 6000க்கும் குறைவாக பதிவாகி வருகிறது. லாக்டவுன் நீக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகியும் கூட தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் பெரிய அளவில் அதிகரிக்காமல் 5500-5900க்கு இடையே பதிவாகி வருகிறது.

இன்று எத்தனை
5,752 பேருக்கு இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 508511 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை 46912 ஆக உள்ளது. தமிழகத்தில் இன்று 5799 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 453165 பேர் தமிழகத்தில் மொத்தமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை நிலை
தமிழகத்தில் இன்று 53 பேர் பலியாகி உள்ளனர். 8434 பேர் மொத்தமாக தமிழகத்தில் பலியாகி உள்ளனர். சென்னையில் இன்று 991 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை 10436 ஆக உள்ளது. சென்னையில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 149583 ஆக உள்ளது.

கோவை எப்படி
தமிழகத்தில் கோவையில் தொடர்ந்து கேஸ்கள் அதிகரித்து வருகிறது.இன்று கோவையில் 498 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 22662 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று செங்கல்பட்டில் 364 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 30743 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று சேலத்தில் 297 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 14774 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

டெஸ்ட் எண்ணிக்கை
5968209மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று 80123 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனைகளை தமிழகம் துரிதப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இன்று 78190 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 5779589 பேர் தமிழகத்தில் கொரோனா சோதனை செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் கொரோனா சோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்தை நெருங்குகிறது.
-
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications