4 லட்சத்தை தாண்டியது.. தமிழகத்தில் 403242 பேருக்கு கொரோனா.. இன்று மட்டும் 5981 பேர் பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று 5981 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை கடந்துள்ளது.
தமிழகத்தில் நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக மீண்டும் கொரோனா கேஸ்கள் தமிழகத்தில் ஏறுமுகத்தில் உள்ளது. கொரோனா காரணமாக தமிழகத்தில் 403242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்..
கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடங்கிய நிலையில், சரியாக 5 மாதங்களில் 4 லட்சம் பேர் தமிழகத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மரணம்
தமிழகத்தில் இன்று 5870 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 343930 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை 52364 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 109 பேர் பலியாகி உள்ளனர். 6948 பேர் இதுவரை தமிழகத்தில் பலியாகி உள்ளனர்.

சோதனை எத்தனை
தமிழகத்தில் செய்யப்பட்டு இருக்கும் கொரோனா சோதனை விவரம்,
இன்று 76345 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று சோதனைகள் உயர்த்தப்பட்டுள்ளது. 4498706 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 74388 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 4347511 பேருக்கு தமிழகத்தில் இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னை எப்படி
தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. சென்னையில் இன்று 1286 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 130564 பேருக்கு சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 13450 பேர் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். சென்னையில் கடந்த 10 நாட்களாக தினமும் 1200க்கும் அதிகமான கேஸ்கள் வருகிறது.

மற்ற மாவட்டங்கள்
சென்னை தவிர பிற மாவட்டங்களிலும் கொரோனா கேஸ்கள் அதிகரித்துள்ளது. செங்கல்பட்டில் 298 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 24749 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று திருவள்ளூரில் 439 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 13398 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று கோவையில் 323 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 23627 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications